நீரில் வாழ்ந்த 16 வயது சிறுவனுக்கு உதவிக்கரம் நீட்டிய அனந்த் அம்பானி"
"நீரில் வாழ்ந்த 16 வயது சிறுவனுக்கு உதவிக்கரம் நீட்டிய அனந்த் அம்பானி"
தண்ணீரிலிருந்து வெளியே வந்தால் உடல் முழுவதும் தாங்க முடியாத அளவுக்கு எரிச்சலும் வேதனையும் ஏற்படும் ஒரு அரிய நோயால் பாதிக்கப்பட்டிருந்தான் வங்காளத்தைச் சேர்ந்த 16 வயது இக்பால்.
அந்தக் கடுமையான வலியைத் தாங்க முடியாமல், கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக இரவு, பகல் பாராமல் ஒரு குளத்தின் தண்ணீரிலேயே வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.
உணவு சாப்பிடுவதும், அன்றாட அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதும் கூட அந்தத் தண்ணீருக்குள்ளேயே செய்ய வேண்டிய நிலை.
அந்தச் சிறுவனின் பரிதாபமான நிலையைப் பார்த்த யாருடைய மனமும் நிச்சயம் நெகிழும். பொருளாதார வசதி இல்லாததால், அவரது குடும்பத்தினரால் சிறந்த மருத்துவ சிகிச்சையை வழங்கவும் முடியவில்லை.
இந்நிலையில், சிறுவனின் நிலையைப் பதிவு செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அது ரிலையன்ஸ் குழுமத்தின் அனந்த் அம்பானியின் கவனத்திற்குச் சென்றதாக கூறப்படுகிறது.
னஇக்பாலின் நிலையைப் பார்த்த அவர், தாமதமின்றி அவரது முழு மருத்துவச் செலவையும் ஏற்றுக்கொள்ள முன்வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு சாதாரண குடும்பத்தால் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவுக்கு அடுத்தடுத்த நடவடிக்கைகள் வேகமாக மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. அவசரமாக நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவக் குழுவை அனுப்பி, இக்பாலை சிறப்பு விமானம் மூலம் வங்காளத்திலிருந்து மும்பையில் உள்ள ரிலையன்ஸ் ஃபவுண்டேஷன் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோடிக்கணக்கான சொத்துக்கள் இருப்பது மட்டுமல்லாமல், பிறரின் துயரத்தைப் பார்த்து அவர்களுக்கு உதவ முன்வரும் பெரிய மனமும் மனிதநேயமும் இருந்தால்தான் இதுபோன்ற உதவிகளைச் செய்ய முடியும்.
இக்பால் விரைவில் முழுமையாக குணமடைந்து, அந்தக் குளத்திலிருந்து வெளியேறி ஒரு இயல்பான வாழ்க்கைக்குத் திரும்பி சாதாரண மனித வாழ்க்கை வாழ வேண்டும் என்பதே பலரதும் ஆசையும் வேண்டுதலும்.
அனந்த் அம்பானியின் இந்த மனிதநேய செயலுக்கு நன்றிகள்.
