Breaking News

5,000 ரூபா லஞ்சம் வாங்கிய காலி மாநகர சபை அதிகாரிகள் இருவர் கைது! ==============

 5,000 ரூபா லஞ்சம் வாங்கிய காலி மாநகர சபை அதிகாரிகள் இருவர் கைது!


==============


காலி மாநகர சபையைச் சேர்ந்த அதிகாரிகள் இரு


வர், 5,000 ரூபா லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் இலஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளினால் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.


ஹார்ட்வெயர் (Hardware) கடை ஒன்றில் விளம்பரப் பலகை வைப்பதற்காக, மாநகர சபைக்குச் செலுத்த வேண்டிய வரித் தொகை குறித்த ஆவணத்தை வழங்குவதற்காவே இந்த லஞ்சம் கோரப்பட்டு, பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


காலி மாநகர சபையின் வருவாய் ஆய்வுப் பிரிவுக்குள் வைத்து இன்று காலை 8.50 மணியளவில் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் காலி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.