கைது செய்யப்பட்ட சொல்லிசைப் பாடகர் சங்கீத்சன் தொடர்பில் இன்று அவசர உயர்மட்டக் கலந்துரையாடல்!
கைது செய்யப்பட்ட சொல்லிசைப் பாடகர் சங்கீத்சன் தொடர்பில் இன்று அவசர உயர்மட்டக் கலந்துரையாடல்!
அண்மையில் விடுதலைப் புலிகள் அமைப்பின் பாடலுடன் தொடர்புடையதாகக் கூறி கிளிநொச்சிப் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ள தமிழ் இளைஞன் விவகாரம் குறித்துப் பொலிஸ்மா அதிபர் மற்றும் சட்டமா அதிபருடன் இன்று செவ்வாய்க்கிழமை (09.06.2026) அவசரக் கலந்துரையாடலொன்று நடத்தப்படவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி இளைஞரின் கைது தொடர்பான சட்டப் பின்னணிகள் மற்றும் அதன் தீவிரத் தன்மை குறித்து உயர் அதிகாரிகளுடன் விரிவாக ஆராயப்பட்ட பின்னர் அந்த இளைஞன் விவகாரத்தில் மிகவும் சாதகமான மற்றும் மனிதாபிமான அடிப்படையிலான இறுதித் தீர்மானமொன்று மிக விரைவில் எடுக்கப்படுமெனவும் அவர் உறுதியளித்துள்ளார்.
