Breaking News

முல்லைத்தீவு மாவட்ட வீதி போக்குவரத்து தொடர்பான கலந்துரையாடல்..!

 முல்லைத்தீவு மாவட்ட வீதி போக்குவரத்து தொடர்பான கலந்துரையாடல்..!



முல்லைத்தீவு மாவட்ட வீதி மற்றும் போக்குவரத்து தொடர்பான மாவட்ட அபிவிருத்தி, இரண்டாம் உப குழு கூட்டம் இன்றைய தினம் (17.06.2026) மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் காலை 9.00 மணிக்கு நடைபெற்றது.


மாவட்ட அரசாங்க அதிபர் திரு அ.உமாமகேஸ்வரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கூட்டுறவு பிரதி அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவருமான உபாலி சமரசிங்க தலைமையில் நடைபெற்றது.


குறித்த கூட்டத்தில் வீதி அபிவிருத்தி வேலைகளின் முன்னேற்றங்கள், வட்டுவாகல் பாலத்தின் தற்போதய நிலவரம் மற்றும் புனரமைக்கப்படாத வீதிகள், சேதமடைந்த பாலங்களின் புனரமைப்பு, பாடசாலை மாணவர்களுக்கான சிசு செரிய பேருந்து சேவை, பேருந்து தரிப்பிடங்கள் மற்றும் ஏற்கனவே தீர்மானம் மேற்கொள்ளப்பட்ட விடயங்களின் தற்போதய முன்னேற்றங்கள் என பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டது


குறித்த கூட்டத்தில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான து.ரவிகரன், செ.திலகநாதன், காதர் மஸ்தான், போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயலாளர் மற்றும் பணிப்பாளர், மாவட்டச் செயலக மேலதிக அரசாங்க அதிபர்கள், பிரதேச செயலாளர்கள், வீதி அபிவிருத்தி வடமாகாண பணிப்பாளர், துறைசார்ந்த அதிகாரிகள், புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.