பருத்தித்துறை மருதங்கேணி வீதியில் வலிக்கண்டி பகுதியில் இன்றைய தினமும் விஷமிகளால் சம்பு புற் தரவைக்கு தீ வைப்பு...!
பருத்தித்துறை மருதங்கேணி வீதியில் வலிக்கண்டி பகுதியில் இன்றைய தினமும் விஷமிகளால் சம்பு புற் தரவைக்கு தீ வைப்பு...!
பருத்தித்துறை மருதங்கேணி வீதியில் வலிக்கண்டி பகுதியில் இன்றைய தினமும் விஷமிகளால் சம்பு புற் தரவைக்கு தீ வைக்கப்பட்ட நிலையில் சில நிமிட n நேரம் கரும்புகையாக வீதிப்போக்கு வரத்துக்கு இடையூறாக காணப்பட்டுள்ளது.
இதனால் பருத்தித்துறையிலிருந்து மருதங்கேணி நோக்கி சென்றவர்களும், மருதங்கேணி பகுதியிலிருந்து பருத்தித்துறை நோக்கி சென்றவர்களும் புகை காரணமாக வீதியில் கடந்து செல்ல முடியாமல் சில நிமிடங்கள் தாமதித்து இருந்த நிலையில் சுயமாகவே தீ கட்டுப்பாட்டுக்குள் வந்த நிலையிலே தமது பயணத்தை தொடர்ந்திருந்தனர் ஒரு சில நாட்களுக்கு முன்னரும் இவ்வாறு விசாமிகளால் சம்பு புற் தரவைக்கு தீ வைக்கப்பட்ட நிலையில் சில மணி நேரங்கள் போக்குவரத்து தடைபட்டதுடன் பனை மரங்கள் உட்பட அதிகளவான மரங்கள் எரிந்து நாசமாகின. உடனடியாக செயல்பட்ட பருத்தித்துறை பிரதேச சபையால் தீ கட்டுப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
