Breaking News

அம்பாறையில் ஆலயங்களுக்கும் கதிர்காம யாத்திரியர்களுக்கும் சந்தியான் ஆசிரமத்தால் உதவி



அம்பாறையில் ஆலயங்களுக்கும் கதிர்காம யாத்திரியர்களுக்கும் சந்தியான் ஆசிரமத்தால் உதவி 



யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தால் மட்டக்களப்பு கல்முனை பகுதியில் அமைந்துள்ள ஶ்ரீ நாககன்னி அம்மன் ஆலயத்தின் கோரிக்கைக்கு அமைவாக,

கட்டுமானப் பணிகளிற்காக 

150,000 ரூபா நிதி இன்று அச்சிரம முதல்வர் சாதனை தமிழன் கலாநிதி செ.மோகனதாஸ் சுவாமிகளால் நேரடியாக சென்று வழங்கி வைக்கப் பட்டுள்ளது.


மேலும் சந்நிதியிலிருந்து 37 வது நாளாக கதிர்காமம் பாத யாத்திரை மேற்கொள்ளும் யாத்திரிகர்களுக்கு அம்பாறை தம்பட்டை ஆலடி விநாயகர் ஆலயத்தில் வைத்து, 09 வது தடவையாக நிதியுதவி வழங்கி வைக்கப்பட்டுள்ளது. இவ் உதவிகளையும் ஆச்சிரம முதல்வர் சாதனைத் தமிழன் கலாநிதி செ.மோகனதாஸ் சுவாமிகள் அவர்கள் தொண்டர்களுடன் நேரடியாகச் சென்று வழங்கி வைத்தார்.