ஊழியரைத் தாக்கிய விவகாரம்: 'Mr. கொத்து' உரிமையாளர் விராஜ் கைது!
ஊழியரைத் தாக்கிய விவகாரம்: 'Mr. கொத்து' உரிமையாளர் விராஜ் கைது!
================
பிரபல 'Mr. கொத்து' உணவகத்தின் உரிமையாளர் விராஜ் விக்ரமநாயக்க, தனது நிறுவன ஊழியர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட ஊழியர் அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உணவக உரிமையாளர் ஊழியரைத் தாக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருவதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
