சுரேஷ் சலே விவகாரம்; அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு ஐக்கிய தேசியக் கட்சி கடும் கண்டனம்! ...
சுரேஷ் சலே விவகாரம்; அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு ஐக்கிய தேசியக் கட்சி கடும் கண்டனம்!
...
அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவுக்கு எதிராக, அரசியலமைப்பு மற்றும் சர்வதேச உடன்படிக்கைகளுக்கு முரணான வகையில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு ஐக்கிய தேசியக் கட்சி தனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.
இது குறித்து விடுத்துள்ள ஊடக அறிக்கையில், சுரேஷ் சலே நடத்தப்படும் விதம் குறித்து நேரில் ஆராய்வதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்றை அனுப்புவது பொருத்தமானதாகும் என அக்கட்சி குறிப்பிட்டுள்ளது.
இத்தகைய நடவடிக்கைகள் சாதாரணமான ஒன்றாக மாற்றப்பட்டால், எதிர்காலத்தில் எதிர்க்கட்சிகளுக்கும் இதே நிலைமை ஏற்படலாம் என எச்சரித்துள்ள ஐ.தே.க, சலேவுக்கு எதிரான ஒவ்வொரு நடவடிக்கையும் சட்டத்திற்கு உட்பட்டதாக இருக்க வேண்டும் என்றும், இவ்விடயத்தில் அரசாங்கத்தின் நகர்வுகளைத் தாம் தீவிரமாக அவதானித்து வருவதாகவும் வலியுறுத்தியுள்ளது.
