உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக பொதுக் கழிப்பறை தொகுதிகளை பராமரிக்க அமைச்சரவை அங்கீகாரம்!
உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக பொதுக் கழிப்பறை தொகுதிகளை பராமரிக்க அமைச்சரவை அங்கீகாரம்!
....
"Clean Sri Lanka" தேசிய திட்டத்தின் கீழ், பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்காக உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக பொதுக் கழிப்பறை தொகுதிகளை நிர்மாணிக்கும் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
கடந்த 2025 ஆம் ஆண்டில் 327 மில்லியன் ரூபா செலவில் 29 திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டு, அதில் 16 திட்டங்கள் நிறைவடைந்துள்ளதுடன் எஞ்சியவை அடுத்த மாதத்திற்குள் நிறைவடையவுள்ளன.
இதன் தொடர்ச்சியாக, தற்போதைய 2026 ஆம் ஆண்டில் முன்னுரிமை அடிப்படையில் 24 உள்ளூராட்சி அதிகாரப் பிரதேசங்களுக்குள் 26 புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக 150 மில்லியன் ரூபா நிதியை ஒதுக்கீடு செய்ய இணக்கம் காணப்பட்டுள்ளது. அரச நிர்வாக அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட இந்த முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
