கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் அரசாங்கத்துடன் சேர்ந்து இயங்குகிறதா...! வர்ணகுலசிங்கம்.
கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் அரசாங்கத்துடன் சேர்ந்து இயங்குகிறதா...! வர்ணகுலசிங்கம்.
தாம் கடலட்டை வளர்ப்பதற்கு அனுமதி வழங்க வேண்டாம் என்று கோரிக்கை விடுத்து வருகின்ற நிலையில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அண்மையில் இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பாரம்பரிய மீன்பிடியாளர்களுக்கு கடலட்டை பண்ணைகளை வழங்க வேண்டும் என்று கூறியிருப்பது கஜேந்திர குமார் பொன்னம் பலமும் அரசாங்கத்துடன் சேர்ந்து இயங்குகிறரா என்ற சந்தேகம் எழுவதாக வடமாகாண மீனவ பிரதிநிதி நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார் அவர் இன்று நடாத்திய ஊடக சந்திப்புலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார் அதன் முழு விபரமும் வருமாறு
இன்று மீனின் விலை 2000 தொடக்கம் 3000 ரூபாவிற்கு மேல் சென்றுள்ளது. இதற்கு மீன் பெருக்கம் இல்லாமைக்கு காரணம் அதிகளவிலான உள்ளூர் இழுவை மடிவு படகுகளின் சட்ட விரோத மீன்பிடி முறையை காரணமாக இருப்பதுடன் இந்திய இழுவை மடி படகுகளின் மீன் பெருக்கிடங்களை இல்லாமல் செய்வதாகும். மீன் பெருக்கம் குறைந்து சென்றுள்ளமையால் மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும், தற்போது சந்தையில் ஒரு கிலோ மீன் குறைந்த விலை 1500 இருந்து3500 வரை விற்பனையாகிறது.
இதேவேளை கடலட்டை பிடித்தல் தொழில் காரணமாக தீவக கடல் உட்பட அனைத்து கடல் பிரதேசங்களிலும் மீன் உற்பத்தியிடங்கள் அழிக்கப்பட்டுள்ளதுடன் மீன்களின் வாழ்விடமான பவளப்பாறைகளும்,
தற்போதும் தொடர்ச்சியாக மின்னொளி பாய்ச்சி சுருக்குவலை தொழில் இடம் பெற்று வருவதனாலும் அதிகளவான சிறிய மீன் குஞ்சுகள் அழிக்கப்பட்டு வருவதனாலும் சிறு மீனவர்களுக்கு மீன்பிடித்தொழிலில் பாரிய பாதிப்பான நிலையில் காணப்படுவதாகவும், கூலர் வாகனங்களில் சட்டவிரோத ஒளிபாய்ச்சி மற்றும் சுருக்கு வலை மீன்பிடி முறை மூலம் பிடிக்கப்பட்ட மீனினங்களை ஏற்றிக்கொண்டு செல்கின்ற போது உரிய அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக் கொண்டு எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை என்றும்
தற்போது கடற்படையின் பணி கடற்கரையிலிருந்து எவன் உளவியந்திரத்தை பயன்படுத்தி கரவலை தொழிலை மேற்கொள்கிறானோ அவனை மட்டும் கைது செய்வதுதான் என்றும், தற்போது கடற்படை இலை, குழைகளை பயன்படுத்தி மீன் பிடிக்கின்றவர்களையோ, அல்லது மின் ஒளி பாய்ச்சி மீன்பிடியில் ஈடுபடுபவர்களையோ கைது செய்வதில்லை என்றும், கடற்படை பல மீனவர்களை தாக்கியதாகவும், கடற்படை தாக்கியவர்களை தாம் நேரில் சென்று சந்தித்ததாகவும் இது தொடர்பில் கடற்படைக்கு எதிராக காவல்துறையில் முறைப்பாடு செய்வதற்கு கடற்படையால் தாக்கப்பட்ட மீனவர்கள் அச்சப்படுவதாகவும், இவ்வாறான சட்ட விரோத செயல்பாடுகள் இடம் பெற்று வருகின்ற நிலையில் நாங்கள் கடற் தொழிலுக்கு சென்று இப்போது பல மாதங்கள் ஆகுகின்றன என்றும், கடல் அட்டை வளர்ப்பு மூலம் கடல் வளங்கள் அழிந்து மீன் இனம் பெருக்கம் இல்லாமல் போகின்றது. இதனால் கடல் அட்டை வளர்ப்பதற்கு அனுமதி வழங்க வேண்டாம் என்று கடற்றொழில் சமூகம் குறிப்பிட்டு வந்த நிலையில் அண்மையில் நடந்த மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கடல் அட்டை பண்ணைகளை பாரம்பரிய மீனவர்களுக்கு வழங்க வேண்டும் என்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிட்டிருந்தார். இதனை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் கடல் அட்டை வளர்ப்பு பண்ணை மீண்டும் வழங்கப்பட்டால் அதற்கு தேவையான கடலை அட்டை குஞ்சுகளை கடலில் இருந்து தான் பிடித்து கடலட்டை வளர்ப்பு பண்ணைகளில் விட வேண்டிய நிலை ஏற்படும் என்றும், இதனால் கடலில் கடலட்டை குஞ்சுகளை உண்டு இனப்பெருக்கம் செய்கின்ற மீன்கள் இல்லாமல் போய்விடும் என்றும், இந்த நிலைமையை பார்த்தால் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் அரசாங்கத்துடன் சேர்ந்து இயங்குகிறதா என்ற எண்ணம் தோன்றுகிறதாகவும் தெரிவித்தார்.
