அம்பேவலை – பெரக்கும்புர – நானுஓயா தொடருந்துப் பாதை சீரமைப்புப் பணிகள் நிறைவு; சோதனை ஓட்டம் வெற்றி
🚆 அம்பேவலை – பெரக்கும்புர – நானுஓயா தொடருந்துப் பாதை சீரமைப்புப் பணிகள் நிறைவு; சோதனை ஓட்டம் வெற்றி
அம்பேவலை, பெரக்கும்புர முதல் நானுஓயா வரையிலான தொடருந்துப் பாதையில் மேற்கொள்ளப்பட்ட சீரமைப்புப் பணிகள் வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளன.
இதனையடுத்து, குறித்த பாதையில் இன்று மேற்கொள்ளப்பட்ட சோதனை ஓட்டமும் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திட்வா புயலால் சேதமடைந்த தண்டவாளங்கள் மற்றும் பாதை அமைப்புகளைப் புனரமைக்கும் பணிகள் கடந்த சில நாட்களாக தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வந்தன.
சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ள நிலையில், பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்திய பின்னர், பதுளை – நானுஓயா வரையிலான தொடருந்து சேவைகள் விரைவில் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
⚠️ பயணிகள் தொடருந்து சேவைகளின் நேர அட்டவணை மற்றும் சேவை ஆரம்பம் தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்புகளைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
