Breaking News

கரவெட்டி மக்கள் எதிர்நோக்கும் நீர் வடிந்தோடல் சிக்கல். விரைவில் தீர்வு காண நடவடிக்கை..! Npp


கரவெட்டி மக்கள் எதிர்நோக்கும் நீர் வ

டிந்தோடல் சிக்கல். விரைவில் தீர்வு காண நடவடிக்கை..! Npp

கரவெட்டி மத்திய பகுதியில் நீண்டகாலமாக நிலவி வரும் வடிகால் அமைப்பு மற்றும் வீதிப் புனரமைப்புப் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படவுள்ளதாகத் npp யின் கரவெட்டி பிரதேச சபை உறுப்பினரால்  தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதேச மக்களின் முறைப்பாட்டையடுத்து மேற்கொள்ளப்பட்ட நேரடிப் கள ஆய்வின் அடிப்படையில் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக கரவெட்டி பிரதேச சபை உறுப்பினர் அஜந்தன் தெரிவித்துள்ளார்.

அவர் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதன் முழு விபரமும் வருமாறு.

சுமார் ஒரு மாதத்திற்கு முன்னர் பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில், குறிப்பிட்ட பகுதிக்குச் சென்று நிலைமைகள் ஆராயப்பட்டன. இதன்போது,  நீரோட்டப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள குழாய்கள் (Pipes) முறையற்ற விதத்தில் அமைந்துள்ளமை கண்டறியப்பட்டது. தேங்கி நிற்கும் நீர் சீராக வெளியேறுவதற்கு ஏதுவாக, சுமார் 50 அடி உயரத்தில் உள்ள குழாய்களைச் சீரமைத்து, நிலமட்டத்திற்கு ஏற்றவாறு மாற்றியமைக்க வேண்டியதன் அவசியம் இதன்போது வலியுறுத்தப்பட்டது.
மேலும், கரவெட்டி மத்தி கன்சான் பாதி வீதி 
மற்றும் சந்திரகலை வீதி ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திப் பணிகளில் தொழில்நுட்பக் குறைபாடுகள் உள்ளமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறிப்பாக  சந்திரகலை வீதியில் சுமார் 120 - 150 மீட்டர் இடைவெளியில் அமைக்கப்பட்டுள்ள வடிகால்  (Drainage) முறையற்றதாக உள்ளது.
நீர் வெளியேற வேண்டிய திசைக்கு மாறாக, எதிர் திசையில் நீர் வடிந்தோடும் நிலை காணப்படுகிறது.

இது பிரதேச சபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களின் கவனக்குறைவினால் ஏற்பட்ட தவறு எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மழைக்காலம் ஆரம்பமாவதற்கு முன்னதாக இப்பிரச்சினைகளுக்குத் தீர்வு காணத் திட்டமிடப்பட்டுள்ளது. 
இது விடயமாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் அவர்களுடன் கலந்துரையாடப்பட்டு, முதற்கட்ட ஆயத்தப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் கரவெட்டி  பிரதேச சபை தவிசாளருடனும்  இவ்விடயம் குறித்துப் பேசப்பட்டுள்ளது.  எதிர்காலத்தில் இவ்வாறான தொழில்நுட்பத் தவறுகள் ஏற்படாத வண்ணம் பணிகளை முன்னெடுக்க இணக்கம் காணப்பட்டுள்ளது.

மேலும்  முறையான நிதிப் பயன்பாட்டின் ஊடாக, மக்களின் அத்தியாவசியத் தேவையை உணர்ந்து இப்பணிகளை விரைந்து முடிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மக்களின் ஒத்துழைப்புடன், எதிர்வரும் பருவமழைக்கு முன்னதாகவே வடிகால் அமைப்புகளைச் சீரமைத்து, முறையான நீர் வழிந்தோடல் திட்டத்தை அமுல்படுத்த முழுமையான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் கரவெட்டி பிரதேச சபை உறுப்பினர்  அஜந்தன் மேலும் தெரிவித்தார்.