Breaking News

அம்பாறை மாவட்ட பொது வைத்திய சாலையில் வாய், தாடை, முகம் தொடர்பான சத்திர சிகிச்சை நிபுணராக Dr. ஷஸ்லி ஹமீட் கடமையேற்பு...

 அம்பாறை மாவட்ட பொது வைத்திய சாலையில் வாய், தாடை, முகம் தொடர்பான சத்திர சிகிச்சை நிபுணராக Dr. ஷஸ்லி ஹமீட் கடமையேற்பு...



அம்பாறை மாவட்ட பொது வைத்திய சாலையில் வாய், தாடை மற்றும் முகம் தொடர்பான சத்திர சிகிச்சை நிபுணராக இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்ட Dr. ஷஸ்லி ஹமீட் ( MD in OMF SURGERY) அவர்களுக்கு வாழ்த்துக்கள்.


இன்று 18.05.2026 அம்பாறை மாவட்ட பொது வைத்திய சாலையில் Dr. ஷஸ்லி ஹமீட் ( MD in OMF SURGERY) அவர்கள் வாய், தாடை மற்றும் முகம் தொடர்பான சத்திர சிகிச்சை நிபுணராக தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.


Dr. ஷஸ்லி ஹமீட் அவர்கள் கிழக்கு மாகாணம் அம்பாறை மாவட்டத்தில் உள்ள மருதமுனையை பூர்வீகமாகக் கொண்டவர். இவரின் இந்த நியமனமானது நீண்டகாலமாக கிழக்கு மாகாணத்தில் நிலவி வந்த இத்துறை சார் வெற்றிடத்தை நன்றே பூர்த்தி செய்து இருக்கிறது. 


இத்துறையின் உள்ளடக்கங்களாவன:

விபத்துக்களால் முகத்தில் ஏற்படும் உடைவுகளை சரி செய்தல்.

உதட்டுப் பிளவு, அண்ணப்பிளவு போன்ற பிறப்பிலேயே குழந்தைகளுக்கு ஏற்படும் குறைபாடுகளை சரி செய்தல்.

ஒழுங்கற்ற தாடை அமைப்புகளால் (சிறிய தாடை, பெரிய தாடை) முகத்தில் ஏற்படக்கூடிய குறைபாடுகளை சரி செய்தல்.

முகம், வாய் என்பவற்றில் ஏற்படும் புற்று நோய்களை குணப்படுத்தல்.

மூக்கு, காது, கண் என்பனவற்றின் உருவம் மற்றும் அளவு என்பனவற்றில் ஏற்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்தல்.

உதடு, கன்னம், நாக்கு, உமிழ்நீர்ச் சுரப்பிகள், பற்கள் என்பவற்றில் ஏற்படும் பிரச்சினைகளுக்கான சத்திர சிகிச்சைகளை மேற்கொள்ளல்.

முகத்தில் ஏற்படும் அழகு சார் குறைபாடுகளை சரிப்படுத்துதல் (Facial Plastic Surgeries)


இவரின் சாதனைகளும் சேவைகளும் தொடர எமது வாழ்த்துக்கள்.