தங்கநகரில் கிழக்கு மாகாண கல்வி திணைக்கள வேன் மாட்டுடன் மோதி விபத்து...!!
தங்கநகரில் கிழக்கு மாகாண கல்வி திணைக்கள வேன் மாட்டுடன் மோதி விபத்து...!!
எஸ் ஜே புஹாது
திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியின் திருகோணமலை தங்கநகர் பகுதியில் இன்று (16) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் கிழக்கு மாகாண கல்வி திணைக்களத்துக்கு சொந்தமான வேன் சேதமடைந்துள்ளது
வீதியில் பயணித்து கொண்டிருந்த வேனுடன் திடீரென வீதிக்கு குறுக்காக பாய்ந்த எருமை மாடு மோதியே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இதன் போது வேனில் பயணித்தவர்களுக்கு எது வித பாதிப்பும் ஏற்பட வில்லை என தெரிவிக்கப்படுகின்ற அதே வேளை மாடு சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளது.
இச்சம்பவம் குறித்து சேருநுவர பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
