Breaking News

யாழ் நல்லூரில் அனுமதி இல்லாத கட்டடத்தை அகற்றவும் அகற்றும் செலவையும் வழங்கவும் .. நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

 யாழ் நல்லூரில் அனுமதி இல்லாத கட்டடத்தை அகற்றவும் அகற்றும்  செலவையும் வழங்கவும் .. நீதிமன்றம் அதிரடி உத்தரவு.



நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட பரமேஸ்வராச் சந்திப் பகுதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையமொன்றின் 3வது தளமானது சபையின் அனுமதியின்றி அமைக்க  ப்பட்டமை தொடர்பில்; பிரதேச சபையினால் யாழ்ப்பாண மேலதிக நீதவான் நீதிமன்றில் கடந்த 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அவ் வழக்கின் தீர்ப்பு 12.05.2026 அன்று வழங்கப்பட்டது.


சபையின் அனுமதியின்றி 3ஆம் தளக் கட்டுமானத்தினை அமைத்தமைக்காக கட்டிட உரிமையாளர் குற்றப்பணமாக ரூபா 30,000 இனைச் செலுத்துமாறும், அனுமதி பெறாமல் அமைக்கப்பட்ட 3ஆம் தளக் கட்டுமானத்தினை நல்லூர் பிரதேச சபை இடித்து அகற்றுவதற்கும் அதற்கான செலவினை கட்டிட உரிமையாளர் சபைக்கு வழங்குமாறும் கௌரவ மேலதிக நீதிமன்ற நீதவான்; தீர்ப்பளித்தார்.