Breaking News

மருதங்கேணியிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்....!


மருதங்கேணியிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்....!



 யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு இளைஞர்களின் ஏற்பாட்டில் இன்றைய தினம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச செயலாளருக்கு முன்னால் முள்ளிவாய்க்கால் நினைவு நினைவேந்தல் நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது 


 நினைவேந்தலில் பொது ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு இனப்படுகொலை செய்யப்பட்ட மக்களுக்காகவும் மாவீரர்களுக்காகவும் இரண்டு நிமிடங்கள் அகவணக்கச் செலுத்தப்பட்டு தொடர்ந்து முள்ளிவாய்க்கால் எனப்படுபவை வாரத்தின் மூன்றாவது நாளை நினைவுபடுத்தும் விதமாக முள்ளிவாய்க்கால் உப்பு கஞ்சி வழங்கும் நிகழ்வு இடம் பெற்றது 



 குறித்த நிகழ்வில் வடமராட்சிக் கிழக்கு இளைஞர்கள் சமூக செயற்பாட்டாளர்கள் பருத்தித்துறை நகர சபை பிரதேச சபை உறுப்பினர்கள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்