Breaking News

பஸ் கட்டணத்தை அதிகரிக்க தனியார் பஸ் சங்கம் கோரிக்கை!

 பஸ் கட்டணத்தை அதிகரிக்க தனியார் பஸ் சங்கம் கோரிக்கை!

...



எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு இணையாக, இடைக்கால பஸ் கட்டணத் திருத்தமொன்றை மேற்கொள்ளுமாறு லங்கா தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடம் கோரியுள்ளது.


இன்று (31) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன, ஜூலை மாத வருடாந்த கட்டணத் திருத்தத்திற்கு முன்னதாக, ஜூன் 2ஆம் திகதி முதல் 5 சதவீத கட்டண அதிகரிப்பை எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டார். இதன் கீழ் குறைந்தபட்ச பஸ் கட்டணத்தை 32 - 33 ரூபா வரை அதிகரிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.


எனினும், தற்போதைய சூழலில் பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்பட மாட்டாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC) அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.