Breaking News

பகல் வேளையில் #வீடொன்றினுள் புகுந்து சுமார் 30 #பவுன் நகை மற்றும் #பணம் கொள்ளை..!

 பகல் வேளையில் #வீடொன்றினுள் புகுந்து சுமார் 30 #பவுன் நகை மற்றும் #பணம் கொள்ளை..! 



✅👉#தெஹிவளையில் சம்பவம்..!


வீட்டு வேலைகளுக்கு அடிக்கடி வந்துபோகும் பாஸ் (மேசன்) உட்பட்ட சிலரால் காலி வீதி தெஹிவளை பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து பெறுமதிவாய்ந்த நகைகள் மற்றும் பணம் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டு விசாரிக்கப்படுகிறது.


குறித்த வீட்டில் வசிப்போர் நேற்று முன் தினம்(3) தினம் நீர்கொழும்பில் உள்ள தமது உறவினர் ஒருவரது வீட்டுக்கு சென்று திரும்புவதற்கிடையில் இந்த பகற்கொள்ளை இடம்பெற்றுள்ளது.


வீட்டுக்கு திரும்பியதும் அந்த அதிர்ச்சி காத்திருந்தது.


குறித்த வீட்டின் மூலைமுடுக்கு ஒவ்வொன்றையும் மிக துல்கியமாக தெரிந்து வைத்திருக்கும் தெஹிவளை பகுதியை சேர்ந்த மேசன்பாஸ் (சிவா) ஒருவரின் தலைமையிலேயே இந்த கொள்ளை நடந்தேறியிருக்கிறது.


தற்போது குறித்த மேசன்பாஸ் தலைமறைவான நிலையில், அவரது மனைவி மற்றும் சகாக்கள் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படுகின்றனர்.


சுமார் ஆறு பெண்கள் அணியும் 27 பவுண் நகைகளும், பயன்படுத்தாத உடைந்த நகைகள் சுமார் 3 பவுணுமாக மொத்தம் 30 பவுண் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளதுடன், பணமாக சுமார் 6000 திர்ஹம்களும் எடுத்து செல்லப்பட்டுள்ளதாக வீட்டார் தெரிவிக்கின்றனர்.


இங்கே CCTV யில் காணப்படும் #நீலநிற டீசேட் அணிந்திருப்பவர்தான் இந்த கொள்ளை சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியாகும்.


எனவே தலைமறைவாகி இருக்கும் இவர் பற்றிய தகவல் ஏதும் தெரிந்தால் அல்லது இங்கே படங்களில் காணப்படும் நகைகள் எங்கேனும் விற்பனைக்கு வந்தால் உடனே கீழ்வரும் இலக்கங்களுக்கு தொடர்புகொண்டு அறியத்தாருங்கள்.


ரகசியம் பேணப்படும். சன்மானம் வழங்கப்படும்.


தொடர்புகளுக்கு


CALL: 0773547789

CALL: 0770629240