Breaking News

மக்களின் அடிப்படை தேவையில் NPP அரசியல் செய்கின்றது-தவிசாளர் யுகதீஸ்


மக்களின் அடிப்படை தேவையில் NPP அரசியல் செய்கின்றது-தவிசாளர் யுகதீஸ்



யாழ் வடமராட்சி கிழக்கு கேவில்-நித்தியவெட்டை பிரதான வீதி புனரமைப்பிற்காக அடிக்கல் நாட்டப்பட்டு ஐந்து மாதங்களைக் கடந்தும் இதுவரை புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்படாததற்கு பருத்தித்துறை பிரதேசசபை தவிசாளர் யுகதீஸ் கட்டணம் தெரிவித்துள்ளார்


இது தொடர்பாக அவர் மேலும் கருத்துரைக் கையில்,


இலங்கையினுடைய இதுவரையான காலப்பகுதியில் கேவில் -நித்தியவெட்டை வீதி புனரமைக்கப்படாமலையே காணப்பட்டது.குன்றும்,குழியுமாக காணப்படும் இந்த வீதியாலையே அப்பகுதி மக்கள் இன்றுவரை பெரும் சிரமங்களை எதிர்கொண்டு பயணித்து வருகின்றனர்.


பாடசாலை மாணவர்கள் தொடக்கம் வைத்தியசாலை செல்லும் நோயாளிகள்வரை இந்த வீதியால் பயணிக்க முடியாமல் நாளாந்தம் துன்பமடைகின்றனர்


பிரதேச சபையை நாங்கள் பொறுப்பெடுத்ததில் இருந்து வடமராட்சி கிழக்கில் மிக முக்கியமாக புனரமைக்கப்பட வேண்டிய வீதிகளில் இந்த வீதியையும் முன்னுரிமை படுத்தி பல முயற்சிகளை எடுத்து வீதிக்கான அடிக்கல் பல மாதங்களின் முன்பு பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவன் எம்பி தலைமையில் நாட்டப்பட்டது


அடிக்கல் நாட்டப்பட்டு பல மாதங்களைக் கடந்துவிட்டது ஒப்பந்த காலமும் முடிவடைந்துவிட்டது ஆனால் ஒப்பந்தம் இன்னும் மாற்றி கொடுக்கப்படவும் இல்லை வீதி புனரமைப்பு பணிகளை மேற்கொள்ளவும் இல்லை


இது தொடர்பாக வீதி அபிவிருத்தி அதிகார சபையிடம் குறித்த வீதியை புனரமைப்புச் செய்வதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு இருந்தேன்


மாவட்ட அபிவிருத்திக் கூட்டத்தில் இந்த வீதி தொடர்பாக நான் பல கோரிக்கைகளை முன்வைத்தேன். இந்த வீதி புனரமைக்கப்படாமல் அதற்கு ஒதுக்கப்பட்ட நிதி திரும்பி செல்லக்கூடாது. இது மிக முக்கியமான வீதியாக இருப்பதால் இந்த வீதியை புனரமைத்து கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தேன்


இது எங்களுடைய பருத்தித்துறை பிரதேச சபைக்குரிய வீதி என்பதால் இந்த வீதி புனரமைப்பு பணியை மேற்கொள்ளாமல் இழுத்தடித்து வருகிறார்கள்

இது மக்களை ஏமாற்றும் ஒரு செயற்பாடாகவே நாம் பார்க்கின்றோம்


மக்களுடைய தேவைகளில் அரசியல் செய்யாமல்,காலத்தை இழுத்தடிக்காமல் கேவில்-நித்தியவெட்டை மக்களுடைய நீண்ட நாள் கோரிக்கையாக காணப்படுகின்ற இந்த வீதியை உடனடியாக புனரமைக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்