Breaking News

தமிழர்கள் அனைவரும் ஓரணியில் திராள்வதே அன்னை பூபதி அம்மாவிற்கு நாம் செய்யும் அஞ்சலி...! சி. வேந்தன்

 தமிழர்கள் அனைவரும் ஓரணியில் திராள்வதே அன்னை பூபதி அம்மாவிற்கு நாம் செய்யும் அஞ்சலி...! சி. வேந்தன் 





தமிழர்கள் அனைவரும் ஒன்று திரண்டு எமது உரிமைக்காக குரல் கொடுப்பதே அன்னை பூபதி அம்மா அவர்களுக்கு நாம் செய்யும் அஞ்சலி என்று ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் சி.வேந்தன் தெரிவித்துள்ளார்.


அன்னை பூபதி அம்மா அவர்களுக்கு தனது அலுவலகத்தில் அஞ்சலி செலுத்திய பின்னர் உரை நிகழ்த்தும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.


அதன் முழு விபரமும் வருமாறு 


ஆயிரக்கணக்கான போராளிகள் இந்த மக்களின் விடுதலைக்காக மாவீரர்கள் ஆகியிருக்கின்றார்கள். இலட்சக்கணக்கான மக்கள் இந்த விடுதலைப் போராட்டத்தில் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். ஆனாலும் ஒரு அரசியல் தீர்வை இன்று வரை எட்டப்பட முடியாத ஒரு நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டு கொண்டிருக்கின்றோம். 

இவ்வாறான அர்ப்பணிப்புகள், தியாகங்கள் செய்து கூட நாங்கள் ஒரு நியாயமான தீர்வை எட்டுவதற்கு முடியாத நிலையில் இருக்கின்றோம்.


ஜனநாயகச் சூழலின் கூட இன்றும் மக்கள் போராட்டங்களை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். ஆனாலும் இன்றும் இந்த சிங்கள அரசு எமது உரிமைகளை பறிக்கின்ற வேலைகளை தொடர்ச்சியாக செய்து கொண்டிருக்கின்றது. 


இன்றும் எங்களுடைய மண் ஆக்கிரமிபிற்கு உட்பட்டுக் கொண்டிருக்கின்றது.

எமது மக்களுடைய காணிகள் இன்றும் விடுவிக்கப்படாமல் அபகரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

நாளுக்கு நாள் நில ஆக்கிரமிப்புகள் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றது. 

அதைவிட நாங்கள் இன்று ஒரு அரசியல் அனாதைகளாக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றோம்.

இவாறிருந்தும் நாங்கள் பல கட்சிகளாக பிரிந்து ஒன்று திரளாமல் இருக்கின்றோம். மக்களுக்காக ஒன்றுபட வேண்டிய எங்களுடைய அரசியல் பலம் என்பது ஒன்றுபடாமல் இன்றும் பின்னோக்கிய தள்ளப்பட்டு கொண்டிருக்கின்றது.

இத்தகைய ஆக்கிரமிப்புக்கள், இன்னல்களுக்கு மத்தியிலும் நாங்கள் ஒன்று படாமல் இருப்பது மன வேதனைக்குரிய விடயம். ஆகவே அன்னை பூபதி அம்மாவினுடைய நினைவு நாளிலே ஒரு சபதம் எடுக்க வேண்டும் 

ஒன்றுபட்டு செயல்பட வேண்டிய ஒரு காலத்திற்குள்ளே நாங்கள் வந்திருக்கின்றோம்.

ஆகவே மக்களுடைய நலனுக்காக நாங்கள் ஒன்றுபட வேண்டும். 

ஒன்றுபடுதல் என்பதுதான் அன்னை பூபதி அம்மாவிற்கு நாம் செய்யும் அஞ்சலி மட்டுமல்ல இந்த மண்ணிற்காக, இந்த மக்களுக்காக தமது இன்னுயிர்களை தியாகம் செய்த அத்தனை மாவீரர்களுக்கும் செய்கின்ற அஞ்சலியாகும்.

இந்த மக்களுக்காக ஒன்று படுவதை தான் இந்த மக்களும் எதிர்பார்க்கின்றார்கள். 

ஒன்றுபட்டு நின்று அவர்கள் எதிர்பார்த்த விடுதலை அடைவதால் தான் அவர்களுடைய ஆத்மா சாந்தியடையும்.

ஆகவே இந்த நாளிலே நாங்கள் அனைவரும் ஒன்றுபட்டு இந்த தேச விடுதலையை வென்றெடுக்க வேண்டும் என்று உறுதி கொள்வோமாக என்றார்.