பருத்தித்துறையில் தியாக தீபம் அன்னை பூபதி அம்மா அவர்களுக்கு 38 ஆவது நினைவேந்தல்......!
பருத்தித்துறையில் தியாக தீபம் அன்னை பூபதி அம்மா அவர்களுக்கு 38 ஆவது நினைவேந்தல்......!
பருத்தித்துறை பண்ணையம்பதி பதி பகுதியில் இன்றைய தினம் (19) காலை 10:30 மணியளவில் ஜனநாயக போராளிகள் கட்சியின் இளைஞர் அணியின் ஏற்பாட்டில் பருத்தித்துறை நகர சபை உறுப்பினர் ஜெய கோபி அவர்களின் அலுவலகத்தில் இடம்பெற்றது
இவ் நிகழ்வில் ஆரம்பத்தில் தியாக தீபம் அன்னை பூபதி அம்மாவின் திரு உருவ படத்திற்கு ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் வேந்தன் அவர்களால் ஈகைச்சுடர் ஏற்றி மலர் மாலை அணியப்பட்டு பின் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது பின்னர் அக வணக்கம் செலுத்தப்பட்டது பின்னர் அவரின் தியாகம் சம்பந்தமாகவும் அவரின் வாழ்க்கை பயணம் பற்றியும் கருத்துக்கள் வழங்கப்பட்டது
இவ் நினைவேந்தல் நிகழ்வில் ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் வேந்தன் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் மூத்த ஊடகவியலாளர் சி.த.காண்டீபன் மற்றும் ஊடகவியலாளர் பூ.லின்ரன் மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சியின் இளைஞர் அணியினர் என பலரும் கலந்து கொண்டனர்
