Breaking News

ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிக்கு இலங்கை சார்பாக சீனா பயணமாகும் வடமாகாணத்தை சேர்ந்த இரண்டு வீரர்கள்!

 ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிக்கு இலங்கை சார்பாக சீனா பயணமாகும் வடமாகாணத்தை சேர்ந்த இரண்டு வீரர்கள்!

ஆசிய ஒலிம்பிக் பேரவை ஏற்பாட்டில், 06வது ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகள் இம்முறை சீனாவின் சான்யா நகரில் ஏப்ரல் 22 முதல் 30 வரை நடைபெற உள்ளது.

இக் கடற்கரை கபடி போட்டியில் யாழ்ப்பாணம் நெல்லியடியைச் சேர்ந்த பிரியவர்ணா மற்றும் யாழ்ப்பாணம் இளவாலையைச் சேர்ந்த டிலக்சனா ஆகியோர் இலங்கை அணிக்காக எதிர்வரும் 19ஆம் திகதி சீனாவின் சான்யா நகருக்கு  பயணமாகின்றனர்.

இப் போட்டியில் இருவரும் தாய்நாட்டிற்கு பெருமை சேர்க்க ஸ்போர்ட்ஸ் மீடியா சார்பாக வாழ்த்துக்கள்.