நவீன சந்தை தொகுதி இருக்க புதிய சந்தை எதற்கு, வலிக்கண்டி, புதிய சந்தை காணி கொள்வனவிலும் நிதி ஊழல், சந்தை கட்டிட அமைப்பிலும் தவறு, பொது கணக்காய்வு அறிக்கை, நகரசபை பல்வேறு நிதி முறைகேடு ..!
நவீன சந்தை தொகுதி இருக்க புதிய சந்தை எதற்கு, வலிக்கண்டி, புதிய சந்தை காணி கொள்வனவிலும் நிதி ஊழல், சந்தை கட்டிட அமைப்பிலும் தவறு, பொது கணக்காய்வு அறிக்கை, நகரசபை பல்வேறு நிதி முறைகேடு ..!
பருத்தித்துறை நகரசபையால் அமைக்கப்பட்ட புதிய மரக்கறி சந்தை தொகுதி உரிய நியமங்கள், நடைமுறைகள், தீர்மானங்கள் பின்பற்றப் படாமல் முறைகேடாக அமைக்கப் பட்டுள்ளதாகவும், காணி கொள்வனவிலும் விலை மதிப்பீட்டு தினைக்களத்தின் மதிப்பீட்டிற்கு அதிகமாக பணம் கொடுக்கப்பட்டு காணி கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும்,
ஆசிய அபிவிருத்தி வெளிநாட்டு நிதியுதவி வடக்கு, கிழக்கு மாகாண சமுதாய மறுசீரமைப்பு அபிவிருத்தி திட்டங்களினூடாக 2009 ஆம் ஆண்டில் பஸ்நிலையத்திற்கு அருகேயுள்ள மரக்கறி சந்தையுடன் கூடிய கடைத்தொகுதி நிர்மாணிக்கப்பட்டிருந்த நிலையில் பிறிதொரு மரக்கறிச் சந்தை உருவாக்கும் நோக்கில் தனியாருக்கு சொந்தமான காணியொன்று 23 மில்லியன் ரூபா செலவில் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும், அக் காணியின் உறுதி எழுதுவதற்கு மொத்த பெறுமதியில் சாதாரண மகா ஒரு வீதமே பணம் வழங்கப்படும் நிலை இருந்தும், அதற்கு 2 வீத பணம் வழங்கப் பட்டுள்ளதாகவும், இதனால் சபை நிதி 230,000 வீணாக்க பட்டுள்ளதாகவும் உரிய கூறுவிலை கோரல் முறை பின்பற்றப்படவில்லை என்றும்,
பிரதேச செயலகத்தில் அரச காணிக்கான கோரிக்கை செய்யப்பட்டு 2 ஏக்கர் விஸ்தீரணமுள்ள அரச காணியொன்று ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்ததுடன் சபை நிதி மூலம் எல்லைக்கான அத்திவாரம் இடப்பட்டிருந்தது. வழங்கப்பட்ட அரச காணியானது பருத்தித்துறை பிரதேச சபையின் அதிகார எல்லையினுள் காணப்படுகின்ற போதிலும் அதனை திண்மக் கழிவு பரிகரிப்பிற்கு பயன்படுத்துவதற்கு பருத்தித்துறை பிரதேச சபையின் அனுமதி பெற்றுக்கொள்ளப்பட்டிருக்கவில்லை என்றும்,
குறித்த அரச காணியானது பெறப்பட்ட நோக்கத்திற்கு தொடர் நடவடிக்கை எதுவுமின்றி பிறிதொரு தனியார் காணியானது ரூபா 12.6 மில்லியன் செலவில் அதே பிரதேச சபை அதிகார எல்லைக்குட்பட்ட பிரிவில் திண்மக் கழிவு பரிகரிப்பு நிலையத்திற்கு பெறுகை நடைமுறையினை பின்பற்றாது கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள பொது கணக்கு ஆய்வு திணைக்களம்,
குறித்த காணியின் எல்லையானது உயிர் வேலியாக காணப்பட்டிருந்த போதும் தற்போதைய நில அளவிடைப்படம் பெற்றுக்கொள்ளப்படாது 10 ஆண்டுகளுக்கு முற்பட்ட நில அளவிடைப்படத்துடன் தனியார் காணியினது நில விஸ்தீரணமானது உரிய நில அளவீடுகளினது ஆவணச்சான்றுகளின்றி கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும்,
அரச மதிப்பீட்டு தினைக்களத்தின் மதிப்பீட்டுக்கு மேலதிகமாக ஆளுநர் அனுமதியினை பெற்று கொடுப்பனவு செய்யப்பட்டமையினால் ரூபா 1,650,000 மேலதிக கொடுப்பனவு ஏற்பட்டுள்ளது என்றும்,
அக் காணியினை திண்மக்கழிவு பரிகரிப்பிற்கு பயன்படுத்துவதற்கு பருத்தித்துறை பிரதேச சபையின் அனுமதியும் பெற்றுக்கொள்ளவில்லை என்றும் இக் காணி உறுதி எழுதுவதற்கும் 1 வீதம் வழங்கவேண்டிய பணத்தை 2 வீதமாக வழங்கியமையால்
126,000 மேலதிக கொடுப்பனவு வழங்கப் பட்டுள்ளதாகவும்,
குறித்த வலிக்கண்டிக் காணிக்கு உரிய முன் அனுமதிகள் பெற்றுக்கொள்ளாதும், தற்போதைய நடைமுறை சந்தை விலையானது பரப்பொன்றுக்கு அண்ணளவாக ரூபா 50,000 நிலவுகின்ற நிலையில் அரச விலை மதிப்பீட்டு திணைக்களத்தின் மதிப்பீட்டை மட்டுமே கருத்தில் கொண்டும், பெறுகை நடைமுறைகளின்றி பொது மக்களுக்கு பகிரங்கப்படுதல் இன்றியும் மேற்கொள்ளப்பட்ட தனியார் காணிக் கொள்வனவு கூட்டு மொத்தம் 12.82 மில்லியன் ரூபா பயன்பாடற்ற செலவீனமாகவும் அத்துடன் கொள்விலையில் மேலதிக கொடுப்பனவு எழுந்துள்ளமையும் அவதானிக்கப் பட்டுள்ளதக்கவும்,
வடமராட்சி வடக்கு பிரதேச செயலக பிரிவில் பருத்தித்துறை கிராம அலுவலர் பிரிவில் பிரசித்த நொந்தாரிசால் எழுதப்பட்ட அறுதி உறுதி இலக்கம் 1013 இன்படி காணித்துண்டு 1,3 நொந்தாரிசினால் எழுதப்பட்ட பிறிதொரு அறுதி உறுதி இலக்கம் 970 படி காணித்துண்டு இலக்கம் 2, அத்துடன் பங்கும் பாவிக்கும் உரித்துடைய பாதையும் அடங்கலான (27 பேர்ச் ) அளவுடைய காணியானது 12.07.2025 அரச மதிப்பீட்டு திணைக்களத்தினால் பேர்ச் ஒன்றுக்கு ரூபா 790,740 பெறுமதியில் கூட்டு மொத்தம் 21.35 மில்லியன் ரூபா (பயன்படுத்தும் உரிமையான பாதைக்கு மதிப்பீட்டுப்பெறுமதியின்றி ) பெறுமதியில் மதிப்பிடப்பட்டிருந்த நிலையில் ரூபா 23 மில்லியன் கொடுப்பனவு செய்யப்பட்டு தனியார் காணி கொள்வனவு செய்யப்பட்டதாகவும் இதனால் 17 இலட்ஷம் வரை வீண் விரயம் செய்யப்பட்டுள்ளதாகவும் பொது கணக்காய்வு திணைக்கம் அறிக்கையிட்டுள்ளதாக இன்றைய சபை அமர்வில் பருத்தித்துறை நகரசபை தவிசாளர் இன்று சபைக்கு அறிவித்தார்.
இது தொடர்பில் வாத பிரதி வாதங்கள்
இடம்பெற்றிருந்தன
