Breaking News

மருதனார்மடம் சந்தை சுற்றி வளைக்கப்பட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது!

 மருதனார்மடம் சந்தை சுற்றி வளைக்கப்பட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது!



வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையதாக கருதப்படும் சந்தேக நபர் தலை மறைவாகியிருந்த நிலையில் நேற்றைய தினம் சுன்னாகம் பொலிஸாரால் மருதனார்மடம் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபர் 24 வயது உடையவர் எனவும் சந்தேக நபரை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதேவேளை இன்றைய தினம் (12) அதிகாலை சுன்னாகம் பொலிஸார் மற்றும் விசேட அதிரடி படையினர் இணைந்து மருதனார்மடம் சந்தை பகுதி சுற்றி வளைப்பு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. இந்த சுற்றிவழிப்பின் போது சந்தேகத்திற்கு இடமானவர்கள் கைது செய்ய பட்டு அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சுன்னாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எச்சரிக்கை விடுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.