Breaking News

நெல்லியடி போலீஸ் அதிரடியான செயற்பாடு



நெல்லியடி போலீஸ் அதிரடியான செயற்பாடு 



யாழ்ப்பாணம் நெல்லியடி போலீசார் 

சட்ட விரோத மணல் அகழும் வாகனகளை துரத்தி செல்லும் காட்சிகள் அண்மையில் வெளியாகியுள்ளது.


வடமராட்சி வடக்கு பிரதேசத்தில் தொடர்ச்சியாக சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெற்று வருவதால் அதனை கட்டுபடுத்தும் நடவடிக்கையில் நெல்லியடி போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.


நேற்று நெல்லியடி போலீஸ் பிரிவிற்கு உட்பட்ட துன்னாலை பகுதியில் சட்டவிரோத மணல் மண் ஏற்றிக்கொண்டிருப்பதாக நெல்லியடி போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நெல்லியடி போலீசார் சம்பவ இடத்திற்கு போலீசாரை அவதானித்த கள்ள மண் கடத்தல் காரர் சிறிய ரக வாகனத்துடன் தப்பி செல்ல முற்பட்டவேளை அதனை நீண்ட தூரம் இரண்டு போலீசார் மோட்டார் சைக்கிலில் துரத்தி சென்ற காட்சி தற்போது சமூக வலைத் தளங்களில் வெளியாகியுள்ளன.


நெல்லியடி போலீசாரின் அதிரடி நடவடிக்கையால் தற்போது கள்ளமண் ஏற்றுதல் ஓரளவு குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படும் அதேவேளை வடமராட்சி கிழக்கில் தற்போது இரண்டு டிப்பர்கள் தலா 4 தடவைகள் சடடைவிரோத மணல் அகழ்வு விநியோகத்தில் ஈடுபடுவதாக மக்கள் தெரிவிப்பதுடன் சட்ட விரோத மணல் மண் கடத்தலால் ஏற்படும் சூழல் பாதிப்புகள் தொடர்பாக மணல் கடத்தல் கும்பலுக்கு பயந்து கருத்து தெரிவிக்க மக்கள் அச்சப்படுகின்ற

னர்.