கட்டைக்காட்டில் இடம்பெற்ற மாபெரும் இலவச மருத்துவ முகாம்
கட்டைக்காட்டில் இடம்பெற்ற மாபெரும் இலவச மருத்துவ முகாம்
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் யாழ் கத்தோலிக்க முன்னணி மருத்துவர்கள் அமைப்பினால் மாபெரும் இலவச மருத்துவ முகாம் இன்று (1.3.2026) ஞாயிற்றுக் கிழமை நடாத்தப்பட்டது.
கட்டைக்காடு பங்குத்தந்தை வசந்தன் அடிகளார் தலைமையில் காலை 8 மணியிலிருந்து பிற்பகல் 1 மணி வரை இந்த இலவச மருத்துவ முகாம் கட்டைக்காடு றோ.க.த.க பாடசாலையில் நடைபெற்றது
நோய் உள்ளவர்கள் மற்றும் நோயற்றவர்கள் அனைவரும் இந்த மருத்துவ முகாமில் கலந்து கொண்டு இலவசமாக தங்களை பரிசோதித்து ஆலோசனைகள் மற்றும் மருந்துகளை பெற்றுச் சென்றனர்
இந்த இலவச மருத்துவ முகாமில்
குருதியமுக்க பரிசோதனை,
நீரிழிவு பரிசோதனை,
இதய நோய்களுக்கான ஆலோசனைகள் மற்றும் பரிசோதனைகள்,
பெண் நோயில் மற்றும் கற்பவதிகளுக்கான ஆலோசனைகள்,
புற்று நோய் சம்பந்தமான ஆலோசனைகள்,
பற் சிகிச்சை மற்றும் பற் சீரமைப்பு தொடர்பான ஆலோசனைகள்,
கண் பரிசோதனை மற்றும் ஆலோசனைகள்,
குழந்தை மருத்துவம்,
விசேட சத்திர சிகிச்சைக்கான ஆலோசனைகள் போன்ற மருத்துவ பரிசோதனைகள் இடம்பெற்றது
பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் விழிப்புணர்வு நாடகமும் குறித்த மருத்துவ முகாமின்போது இடம்பெற்றதுடன் சுமார் 500 இற்கும் அதிகமான நோயாளிகள் வருகை தந்து பயன்பெற்றமை குறி
ப்பிடத்தக்கது.
