Breaking News

யா/கட்டைக்காடு றோ.க.த.க பாடசாலையில் இல்ல மெய்வல்லுனர் போட்டி

 யா/கட்டைக்காடு றோ.க.த.க பாடசாலையில் இல்ல மெய்வல்லுனர் போட்டி





யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு யா/கட்டைக்காடு றோ.த.க பாடசாலையின் இல்ல மெய்வல்லுனர் போட்டி நேற்று (11) இடம் பெற்றுள்ளது.


யா/கட்டைக்காடு றோ.க.த.க பாடசாலை அதிபர் தவகோபால் யோகலிங்கம் தலைமையில் பிற்பகல் 2.00 மணியளவில் பாடசாலை விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமானது.


விருந்தினர்கள் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டு மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வு ஆரம்பமானது


மாணவர்களுக்கான பல்வேறு விளையாட்டு நிகழ்வுகள் இடம் பெற்றதுடன் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் வெற்றிக்கேடயங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது


நிகழ்வின் பிரதம விருந்தினராக இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரியின் உதவி அதிபர் அருட்பணி றெனால்ட் செறில்நெஸ் அவர்களும்,


சிறப்பு விருந்தினராக மருதங்கேணி கோட்டக்கல்வி பணிப்பாளர் சிறிராமச்சந்திரன் அவர்களும்,


கெளரவ விருந்தினராக முள்ளியான் கிராம அலுவலர் சுபகுமார் அவர்களும் கலந்து கொண்டதுடன்,


ஏனைய விருந்தினர்களாக கட்டைக்காடு பங்குத்தந்தை அருட்தந்தை வசந்தன்,பருத்தித்துறை பிரதேசசபை உறுப்பினர் அலஸ்ரன்,சென்மேரிஸ் விளையாட்டுக் கழக தலைவர் அருள்விமலதாஸ்,கிராம அபிவிருத்திச்சங்கம் மற்றும் ஏனைய கிராம அமைப்புகள்,ஆசிரியர்கள்,மாணவர்கள் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


இல்ல மெய்வல்லுனர் போட்டியை கண்டு கழிப்பதற்காக பெற்றோர்கள் பழைய மாணவர்கள் நலன் விரும்பிகளும் கலந்து கொண்டமை குறி

ப்பிடத்தக்கது