வடமராட்சி கிழக்கில் தொடர்ச்சியாக அழிக்கப்படும் பனை மரங்கள், அனுமதி வழங்கியது யார்..!
வடமராட்சி கிழக்கில் தொடர்ச்சியாக அழிக்கப்படும் பனை மரங்கள், அனுமதி வழங்கியது யார்..!
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பகுதிகளில் தொடர்சியாக பனை மரங்கள் அழிக்கப்பட்டு கொண்டிருக்கின்றன.
வடமராட்சி கிழக்கின் பெரும் சொத்தான பனைமரங்கள் பல இலட்சக் கணக்கில் யுத்ததித்தில் 2009 வரை அழிக்கப்படிருந்த நிலையில் யுத்தம் முடிவுக்கு பின்னர் தென்னிலங்கை மற்றும் உள்ளூர் வாசிகள் பலர் செல்வாக்கை பயன்படுத்தி அழிக்கப்படுக் கொட
ண்டிருக்கிறன.
இதைவிட தமது காணிகளை துப்பரவு செய்வதற்காகவும் தொடர்சியாக பனை மரங்கள் அழிக்க பட்டுக் கொண்டிருப்பதுடன்
விவசாயம் மேற்கொள்வதற்கு காணிகளை துப்பரவு செய்வதற்கும் பனை மரங்கள் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
யுத்தத்திற்கு முன்பு பாதுகாக்கப்பட்ட பனை மரங்கள் அதிகளவு யுத்தத்திற்கு பின்பு அழிக்கப்பட்டுள்ளது
வடமராட்சி கிழக்கில் இருந்து தொடர்ச்சியாக பனைகள் அழிக்கப்பட்டு பனை மரங்கள் சட்டவிரோதமாக ஏனைய பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன
தொடர்ச்சியாக சட்டவிரோத பனை அழிப்பு இடம்பெற்றுவரும் நிலையிலும் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை
பனைமரத்தில் இருந்து கைத் தொழில் முயற்சியாளர்கள் உட்பட பாமர மக்கள் அதிகளவு பயன்பெற்றுவரும் நிலையில் பனை மரம் அதிகளவாக அழிக்கப்படுவதால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிப்படைகின்றன.
பனை மரங்கள் அழிக்கப்படுவதற்கு எதிராக பனை அபிவிருத்தி சபை, மற்றும் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என மக்கள் தெரி
விக்கின்றனர்.
