இரண்டரை கோடி ரூபா நிதி ஒதுக்கீட்டில் புனரமைக்கப்படவுள்ள இன்பச்சோலை வீதி!
இரண்டரை கோடி ரூபா நிதி ஒதுக்கீட்டில் புனரமைக்கப்படவுள்ள இன்பச்சோலை வீதி!
இரண்டரை கோடி ரூபா நிதி ஒதுக்கீட்டில், யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை, இன்பச்சோலை வீதியை புனரமைப்பதற்கான பூர்வாங்க பணிகள் இன்றையதினம் ஆரம்பமாகியுள்ளன.
குறித்த வீதியானது 45 வருடங்களுக்கு மேலாக புனரமைப்பு செய்யப்படாமல் இருந்த நிலையிலேயே இன்று இவ்வாறு புனரமைப்பு பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் கலந்துகொண்ட தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ பவானந்தராஜா முதலில் அடிக்கல்லை நாட்டி வைத்தார். அதனைத் தொடர்ந்து ஏனையோர் அடிக்கற்களை நாட்டி வைத்த நிலையில் புனரமைப்பு பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ பவானந்தராஜா, சங்கானை பிரதேச செயலர் கவிதா உதயகுமார், குறித்த பகுதிக்கான கிராம சேவகர் சிவகுமார், வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் மற்றும் கிராம மக்கள் என பலரும் கலந்துகொண்
டனர்.
