Breaking News

குஸ் வகைப்போதைப் பொருளுடன் கிளிநொச்சியில் சிங்கள இரு மாணவர்கள் கைது......!



குஸ் வகைப்போதைப் பொருளுடன் கிளிநொச்சியில் சிங்கள இரு மாணவர்கள் கைது......!



கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் இன்றைய தினம் புதன் கிழமை காலை இரு சிங்கள மாணவர்கள் குஸ் வகை போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர் 


இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது 


ஊழல் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் குறித்த பிரிவினர் ஓர் விசேட தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர் 


இதன் போது ஜேர்மன் டெக் கல்வி நிலையத்தில் கல்வி கற்கும் மாணவர்களின் உண்மையில் இருந்து குஸ் வகை போதைப்பொருளை கண்டு பிடித்துள்ளனர் 


கைது செய்யப்பட்ட இரு மாணவர்களும் தென் இலங்கையில் இருந்து வந்து கல்வி கற்பதாகவும் ஒரு மாணவனின் உடமையில்1 கிராம் குஸ் பேதைப்பொருளும் மற்றய மாணவரின் உடமையில் 710 மில்லி கிராம் போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளது 


கைது செய்யப்பட்ட மாணவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக இன்றய தினம் கிளிநொச்சி நீதிவான் நீதி மன்றத்தில் ஆயர் படுத்த பட உள்ளனர்