Breaking News

மருதங்கேணி இ.த.க வித்தியாலய மாணவர்களுக்கு பல இலட்சம் ரூபா பெறுமதியான உதவிகள்

 மருதங்கேணி இ.த.க வித்தியாலய மாணவர்களுக்கு பல இலட்சம் ரூபா பெறுமதியான உதவிகள்



வடமராட்சி கிழக்கு மருதங்கேணி இ.த.க வித்தியாலய மாணவர்களுக்கு கற்றல் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் இன்று வழங்கிவைக்கப்பட்டன,


சுவிஸ் நாட்டில் வசிக்கும் மயில்வாகனம் சிறிதர்மராசா என்பவரால் அவரது தங்கையான அமரர் மயில்வாகனம் கன்னிகாராணி நினைவாக பல இலட்சம் ரூபா பெறுமதியில் இன்று(9) பாடசாலை மாணவர்களுக்கு பல்வேறு உதவிகள் வழங்கிவைக்கப்பட்டன.


 தரம் 1 இருந்து தரம் 6 வரையான மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள்,விளையாட்டு உபகரணங்கள் புலமைபரிசில் பரிட்சையில் சித்திபெற்ற மாணவர்களுக்கான நிதி போன்ற பல உதவிகள் இன்று பாடசாலையில் வைத்து வழங்கிவைக்கப்பட்டன


பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் புலம்பெயர் தேசத்தில் இருந்து தாயகத்தில் பல நலத்திட்ட உதவிகளை செய்துவரும் மயில்வாகனம் சிறிதர்மராசா மற்றும் அவரது துணைவியாருக்கு பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டதுடன் நினைவுச் சின்னமும் வழங்கிவைக்கப்பட்டன


இந்நிகழ்வில் ஆசிரியர்கள்,மாணவர்கள்,பழைய மாணவர்கள் எனப் பலர் கலந்து

 கொண்டனர்