Breaking News

சிறப்பாக இடம்பெற்ற வேலாயுதம் மகா வித்தியாலய விளையாட்டு போட்டி..!

 சிறப்பாக இடம்பெற்ற வேலாயுதம் மகா வித்தியாலய விளையாட்டு போட்டி..!



யாழ்ப்பானம் வடமராட்சி பருத்தித்துறை வேலாயுதம் மகா வித்யாலயத்தின் வருடாந்த இல்ல மெய் வல்லுநர் போட்டி பாடசாலை அதிபர் t. செந்தில்நாதன் தலைமையில் பாடசாலை மைதானத்தில் நேற்று பிற்பகல் 1:30 மணியளவில் ஆரம்பமானது.


இதில் முதல் நிகழ்வாக விருந்தினர்கள் மாலை அணிவிக்கப்பட்டு மேலைதேய இசை முழங்க வரவேற்கப்பட்டு மங்கல சுடர்கள் ஏற்றப்பட்டு விளையாட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின.


இதில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசில்கள், பதக்கங்கள், சான்றிதழ்களையும், கருத்துரைகளையும் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட பிரபல தொழிலதிபரும் பாடசாலை பழைய மாணவருமான

விஜயகுமாரன் ரகுராம், விவசாய பயிற்சி கல்லூரியின் அபிவிருத்தி உத்தியோகத்தருமான ஆனந்தராசா ராகுவாரன் உட்பட பலரும் வழங்கி கௌரவித்தனர்.


இந் நிகழ்வில் வேலாயுதம் மகா வித்தியாலய அதிபர் அசோரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள், நலன் விரும்பிகள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்

.