Breaking News

வடமராட்சி கிழக்கில் 399 ஏக்கர் காணி அபகரிப்பு நடவடிக்கைக்கு மக்கள் எதிர்ப்பு..!


வடமராட்சி கிழக்கில் 399 ஏக்கர் காணி அபகரிப்பு நடவடிக்கைக்கு மக்கள் எதிர்ப்பு..!



யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மணல்காடு குடத்தனை வடக்கு, பொற்பதி குடத்தனை கிழக்கு கிராம சேவகர் லிரிவுகளில் தனியார் ஒருவருக்கு கொல்வ் விளையாட்டுக்களுடன் கூடிய. சுற்றுலா, பொழுதுபோக்கு மைய்யங்கள் அமைப்பதற்க்காக 300 ஏக்கர் காணியை பெற்றுக்கொள்ளும் நோக்கில் இன்றைய தினம் குறித்த தனியார நிறுவனத்தால் மணல்காடு, குடத்தனை வடக்கு, பொற்பதி கிராம மக்களுடனான கலந்துரையாடல் மணல்காட்டில் இடம் பெற்றது.


இதில் குறித்த தனியார்‌ நிறுவனத்தால் மக்களிடம் காணியை பெற்றுக்கொள்வதற்க்காக. விருப்பம் கோரியபோது குறித்த பிரதேச மக்களால் தமது கிராம. சூழலில் காணிகளை வழங்க. முடியாது என திட்ட வட்டமாக. தெரியும் வித்துள்ளனர்.


இது தொடர்பாக ஊடங்களுக்கு கருத்து தெரிவித்த பிரதேச மக்கள் தமது மணல்காடு கிராமத்தில் தற்போது 450 க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவருவதாகவும் இதில் 150 பேருக்கு மேற்பட்ட குடும்பங்கள் கணி இல்லாமல் உறவினர்கள் நண்பர்கள் வீடுகளில் வசித்து வருவதாகவும், தமது கிரகத்தை சூழவுள்ள பகுதியில் 156 ஏக்கர் காணி மட்டுமே உள்ளது என்றும் இதனால் தமது கிராமத்தில் கணி இல்லாதோர்க்கே காணிகள் வழங்க இருக்கின்ற அரச காணிகள் போதாத நிலை உள்ளதாகவும், இதனாலேயே தமது எதிர்கால சந்ததிகளின் நலன்கருதி குறித்த. பகுதியில் காணிகள் வழங்க முடியாது என்றும் தெரிவித்தனர்.


இதேவேளை குறித்த விடயம் தொடர்பில் குறித்த. தனியார் நிறுவனத்திடம் கேட்டபோது மக்கள் ஏதிர்க்கின்றனர். இதனால் மக்களின் எதிர்ப்பை மீறி தமது கால்வ் மைதானத்துடன் கூடிய பொழுதுபோக்கு மற்றும் சுற்றுலா மைய்யங்களை அமைக்கும் பணியை தொடர போவதில்லை என்றும் தெரிவித்தனர்.