Breaking News

சிறைப்பிடிக்கப்பட்ட காரைக்கால் மீனவர்களின் விசைப்படகு விடுவிக்கப்படும்-எமரால்ட்

 


சிறைப்பிடிக்கப்பட்ட காரைக்கால் மீனவர்களின் விசைப்படகு விடுவிக்கப்படும்-எமரால்ட்



சிறைப்பிடிக்கப்பட்ட காரைக்கால் மீனவர்களின் விசைப்படகு விடுவிக்கப்படுமென

ராமேஸ்வரம் விசைப்படகு மீனவ சங்க பிரதிநிதி எமரால்ட் தெரிவித்துள்ளார்.


ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,


இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்து இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழித்து வருவதுடன் தனுஷ்கோடி கடற்பரப்பில் இரவு பகலாக தங்கி மீன்பிடிக்கும் காரைக்கால் பகுதி மீனவர்களை நடுக்கடலில் சிறைபிடித்த ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் படகுடன் மீனவர்களை மீன் பிடித்துறைமுகத்திற்கு அழைத்து வந்தனர்.


ராமநாதபுரம், தஞ்சை, புதுக்கோட்டை, மாவட்ட மீனவர்கள் வாரத்தில் மூன்று நாட்களும், நாட்டு படகுகள

 நான்கு நாட்களும் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.


 இந்நிலையில் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பகுதியைச் சேர்ந்த மீன்பிடி விசைப்படகுகள் கடலில்10 முதல் 15 நாட்கள் தங்கி மீன் பிடியில் ஈடுபட்டு வருவதால் தஞ்சை, ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டம் மீனவர்களின் வாழ்வாதார பாதிக்கப்படுவதுடன் காரைக்கால் பகுதி மீனவர்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் சென்று கரையோரம் மீன்பிடியில் ஈடிபடுவதுடன், இலங்கை மீனவர்களின் உடமைகளை சேதப்படுத்தால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இலங்கை கடற்படையின் ஊடாக தமிழக மீனவர்களை கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.


இதனால் காரைக்கால் பகுதி மீனவர்கள் பாக் ஜலசந்தி, தனுஷ்கோடி கடற்பரப்பில் மீன் பிடிக்க கூடாது, என கடந்த மாதம் புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சை மாவட்ட மீனவர்கள் தங்கச்சிமட்டத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தி பாக் ஜலசந்தி கடற்பரப்பில் தங்கி மீன்பிடிக்கும் காரைக்கால் மீன்பிடி விசைப்படகளை கடலில் வைத்து சிறை பிடிப்பதாக முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றியதுடன் இது தொடர்பாக காரைக்கால் சென்ற மீனவ சங்க பிரதிநிதிகளை காரைக்கால் மீனவ சங்கத்தினரை சந்தித்து அறிவுறுத்தி வந்தனர்.


 இதனிடையே இலங்கை கடற்பரப்பில் காரைக்கால் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிப்பதுடன், தனுஷ்கோடி பகுதியில் மீன் பிடிப்பதால் ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களுக்கு எதிர்பார்த்த அளவு மீன் வரத்து கிடைக்காததாலும்,இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்கும் காரைக்கால் விசைப்படகை கைது செய்ய முடியாமல் இலங்கை கடற்படை ராமேஸ்வரம்மீனவர்பளை தொடர்ந்து கைது செய்து வருவதால் நேற்று இரவு ராமேஸ்வரத்தில் இருந்து நான்கு விசைப்படகுகளில் மீனவர்கள் தனுஷ்கோடி கடற்பரப்பில் மீன்பிடிக்கும் காரைக்கால் பகுதி மீனவர்களை சிறை பிடிப்பதற்காக சென்றனர் .


இந்நிலையில் இன்று அதிகாலை தனுஷ்கோடி கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ஒரு காரைக்கால் மீன்பிடி விசைப்படகையும், அதிலிருந்த 14 மீனவர்களையும் ராமேஸ்வரம் மீனவர்கள் நடுக்கடலில் வைத்து சிறைபிடித்து ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்திற்கு அழைத்து வந்தனர்.


சிறை பிடித்து அழைத்து வந்த மீனவர்கள் 14 பேரையும் வாகனத்தில் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்ததுடன், மீன்பிடி விசைப்படகை ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்.


 இது தொடர்பாக காரைக்கால் மீன்வளத்துறை அதிகாரிகளுடன் ராமநாதபுரம் மாவட்டம் மீன்வளத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருவகின்றனர்.


 தனுஷ்கோடி கடற்பரப்புக்குள் காரைக்கால் பகுதி மீனவர்கள் வருவதை நிறுத்திக் கொள்வதுடன் கடலில் தங்கி மீன் பிடிப்பில் ஈடுபடக் கூடாது என முடிவு செய்த பின் படகு ஒப்படைக்கப்படும் என மீனவர்கள் தெரிவித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்


நடுக்கடலில் காரைக்கால் மீன் பிடிப்படகை மீனவர்களுடன் ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் சிறைபிடித்த சம்பவம் காரைக்கால் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியு

ள்ளது