காரைதீவில் இனம் தெரியாத விஷமிகளால் பல இலட்சம் பெறுமதியான கிரிக்கெட் மற்றின்கள் தீக்கிரை...
காரைதீவில் இனம் தெரியாத விஷமிகளால் பல இலட்சம் பெறுமதியான கிரிக்கெட் மற்றின்கள் தீக்கிரை...
காரைதீவு விபுலாநந்தா மத்திய கல்லூரி மைதானத்தின் களஞ்சிய அறையினுள் வைத்திருக்கப்பட்ட காரைதீவு விளையாட்டுக்கழகம்,விவேகானந்தா விளையாட்டுக்கழகம் ஜொலிக்கிங்ஸ் விளையாட்டுக்கழகங்களிற்கு சொந்தமான கடின பந்து கிரிக்கெட் விளையாடும் விரிப்புக்கள்(Matin)இன்று அதிகாலை வேளையில் இனந்தெரியாத விசமிகளால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக பாடசாலை அதிபர் உட்பட இம் மூன்று கழகத்தின் தலைவர்களும் இணைந்து காரைதீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இதனடிப்படையில் காரைதீவு பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி சம்பவ இடத்திற்கு உடனடியாக வருகை தந்து பார்வையிட்டதுடன் இச்சம்பவம் மேலதிக நடவடிக்கைகளை தொடர உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்....
