யாழ். வெண்கரம் அமைப்பின் ஏற்பாட்டில் மலையக மாணவர்களுக்கு கருத்தரங்கு!
யாழ். வெண்கரம் அமைப்பின் ஏற்பாட்டில் மலையக மாணவர்களுக்கு கருத்தரங்கு!
யாழ். வெண்கரம் அமைப்பின் ஏற்பாட்டில் நுவரெலியா புசல்லாவை இந்து தேசிய கல்லூரி மாணவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட கருத்தரங்கு, குறித்த பாடசாலையில் இன்றையதினம் நடைபெற்று வருகிறது.
டித்வா புயல் காரணமாக மலையகத்தில் அதிக பாதிப்புகள் ஏற்பட்டன. அந்தவகையில் மாணவர்கள் தமது கல்வி நடவடிக்கைகளை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இன்னும் ஒரு சில மாதத்தில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை ஆரம்பமாகவுள்ளது. அந்தவகையில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்காக இந்த கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் குறித்த மாணவர்கள் வீட்டில் இருந்து சுய கற்றல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் அவர்களுக்கு முக்கிய 5 பாடங்களை உள்ளடக்கிய கற்றல் கையேடுகளும் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் கம்பளை கல்வி வலயம் பிரதிப் பணிப்பாளர் விஜயேந்திரன், வெண்கரம் அமைப்பின் பிரதான செயற்பாட்டாளர் மு.கோமகன், வெண்கரம் அமைப்பினர், அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் க
லந்துகொண்டனர்.
