குப்பைகளை அகற்றுவதற்கு சங்கங்கள் ஒத்துழைப்பு தரவில்லை-பருத்தித்துறை பிரதேசசபை தவிசாளர்
குப்பைகளை அகற்றுவதற்கு சங்கங்கள் ஒத்துழைப்பு தரவில்லை-பருத்தித்துறை பிரதேசசபை தவிசாளர்
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கரையோரங்களில் காணப்படும் குப்பைகளை அகற்றுவதற்கு கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களுடைய சமாசம் மற்றும் சங்கம் ஒத்துழைப்பு வழங்கவில்லை என பருத்தித்துறை பிரதேசசபை தவிசாளர் யுகதீஸ் குற்றம் சாட்டியுள்ளார்
இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
அண்மையில் ஏற்பட்ட டித்வா புயலினால் வடமராட்சி கிழக்கு கரையோர பகுதிகளில் அதிகளவான குப்பைகள் தேங்கி காணப்படுகிறது
இதனை அகற்ற வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.ஆனால் தொன் கணக்கில் தேங்கி காணப்படும் இந்த குப்பைகளை அகற்ற வேண்டும் என்று சொன்னால் பிரதேச சபையால் மட்டும் முடியாது.பிரதேச சபையுடன் சேர்ந்து வடமராட்சிகிழக்கு கடற்தொழிலாளர் சமாசம் மற்றும் சங்கங்கள் இணையுமாறு பிரதேச சபையால் கடிதம் அனுப்பப்பட்டது.
ஆனால் வடமராட்சி கிழக்கு சமாசமோ,சங்கங்களோ இந்த பணியில் ஈடுபடவில்லை என தவிசாளர் குற்றம் சாட்டியுள்ளார்
வடமராட்சி கிழக்கு கரையோரத்தில் தேங்கி காணப்படும் குப்பைகள் பருத்தித்துறை பிரதேசசபையால் கட்டம் கட்டமாக அகற்றப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது
.
