யாழில் வெளிநாட்டுக்கு அனுப்புவதாக வைத்திய தம்பதிகள் மோசடி.. பொலிசில் முறைப்பாடு.
யாழில் வெளிநாட்டுக்கு அனுப்புவதாக வைத்திய தம்பதிகள் மோசடி.. பொலிசில் முறைப்பாடு.
யாழில் வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி பெண் ஒருவரிடம் சுமார் 30 இலட்சம் ரூபாய்க்கு அதிகமாக வைத்திய தம்பதிகள் ஏமாற்றி உள்ளதாக பாதிக்கப்பட்ட பெண்ணின் தங்கை பொலிசில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் குறித்த வைத்திய தம்பதிகள் தனது அக்காவை வெளிநாடு அனுப்புவதாக கூறி இரண்டு வருடங்களாக கம்போடியா நாட்டில் தடுத்து வைத்துள்ளனர்.
எனது அக்காவை போன்று மேலும் பலர் அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு உணவு மற்றும் தாங்கும் உரிய முறையில் ஏற்படுத்திக் கொடுக்காத காரணத்தினால் பலர் அடிமைகளாக அங்கு வேலை செய்வதாக தெரிவித்தார்.
குறித்த வைத்திய தம்பதியினர் நீர் கொழும்பில் வசிக்கும் இன்னுமொரு தரப்பினர் ஊடாக ஆட்களை திரட்டி வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக மோசடி வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தனது அக்காவை போன்று மேலும் பலர் வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கம்போடியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த வைத்திய தம்பதியினரை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் பாதிக்கப்பட்ட பெண்ணின் தங்கை கோரிக்கை முன் வைத்துள்ளார்.
