500 லீற்றர் மண்ணெண்ணையை பதுக்கிய சந்தேக நபர் மற்றும் வாகனம் பருத்தித்துறை பொலிஸாரால் கைது.....!
500 லீற்றர் மண்ணெண்ணையை பதுக்கிய சந்தேக நபர் மற்றும் வாகனம் பருத்தித்துறை பொலிஸாரால் கைது.....!
யாழ்ப்பாணம் பருத்தித்துறை மந்திகை எரிபொருள் நிரப்பு நிலையம் அருகாமை நேற்றைய முன் தினம் 500 லீற்றருக்கு மேற்பட்ட மண்ணெண்ணையை பதுக்கிய சந்தேக நபரும் பதுக்க பயன்படுத்த பயன்படுத்திய வாகனமும் பருத்தித்துறை பொலிசால் கைது செய்யப்பட்டுள்ளது
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது
சந்தேகத்துக்கு இனங்க அதிகளவான மண்ணெண்ணையை வியாபார நடவடிக்கைக்காக வோ அல்லது வேறு தேவைக்காகவோ பயன்படுத்துவதற்கு வாகனத்தின் மூலம் மந்திகை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அருகாமையில் இருந்து கடத்த முயன்ற போது பருத்தித்துறை பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில்
உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் சம்பவத்தில் ஈடுபட்டு இருந்த வாகனத்தையும் சந்தேக நபரையும் உடனடியாக கைது செய்தனர்
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அவரின் வாகனம் மற்றும் எரிபொருள் என்பவன மேலதிக சட்ட நடவடிக்கைக்காக இன்றய தினம் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்க படவுள்ளனர்
