சந்நிதியான் ஆச்சிரமம் திருகோணலை அறநெறி பாடசாலைகளுக்கு சீருடை..!
சந்நிதியான் ஆச்சிரமம் திருகோணலை அறநெறி பாடசாலைகளுக்கு சீருடை..!
யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிராமத்தால்
திருகோணமலை மாவட்டத்திலுள்ள ஈச்சிலம்பத்தை பிரதேச செயலக பிரிவிலுள்ள
வெருகல் பிரதேசத்தில் சீனம் வெளி வட்டவான்,
கறுக்காமுனை, வாழைத்தோட்டம், உப்பூரல், முத்துச்சேனை, புன்னையடி உட்பட்ட அறநெறி பாடசாலைகளை சேர்ந்த 300 மாணவர்களுக்கு 355,000 ரூபா பெறுமதியான சீருடைகள் இன்று வழங்கி வைக்கப்பட்டது.
இச் சீருடைகளை சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் சாதனைத் தமிழன் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் அவர்கள் தொண்டர்களுடன் குறிக்கப்பட்ட அறநெறிப் பாடசாலைகளுக்கு நேரடியாகச் சென்று வழங்கி வைத்தார். இதில் ஈச்சிலம்ற்று பிரதேச செயலக கலாச்சார உத்தியோகத்தர் திரு ஏ.கிருபாகரனும் கலந்து கொண்டார்.
