Breaking News

வடமராட்சி கிழக்கு கரையோர பகுதி பருத்தித்துறை பிரதேச சபையால் தூய்மைப்படுத்தல்

 வடமராட்சி கிழக்கு கரையோர பகுதி பருத்தித்துறை பிரதேச சபையால் தூய்மைப்படுத்தல்



யாழ் வடமராட்சி கிழக்கு கரையோர கரையோர பகுதிகளில் காணப்படும் குப்பைகள் பருத்தித்துறை பிரதேச சபையால் இன்று(18) தூய்மைப்படுத்தப்பட்டது


பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் உதயகுமார் யுகதீஷ் தலைமையில் இன்று காலை 7:30 மணியிலிருந்து தூய்மைப்படுத்தும் செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டது


மாமுனை தொடக்கம் கட்டைக்காடு கரையோரப் பகுதிகளில் காணப்படும் குப்பைககளே இவ்வாறு தூய்மைப்படுத்தப்பட்டது


கடந்த காலத்தில் டித்வா புயலினால் கரையோரப் பகுதிகளில் குப்பைகள் அதிகளவாக தேங்கி காணப்பட்டன.வீதி ஓரங்களில் குப்பைகள் காணப்படுவதனால் நோய் பரவும் அபாயம் காணப்படுவதாகவும் ,உடனடியாக அகற்றுமாறும் கடந்த காலத்தில் மக்கள் பல கோரிக்கைகளை முன்வைத்துவந்தார்கள்


மக்களின் கோரிக்கைக்கு அமைவாக பருத்தித்துறை பிரதேச சபையால் வடமராட்சி கிழக்கு கரையோர பகுதிகளில் காணப்பட்ட குப்பைகள் அகற்றப்பட்

டன.