பொற்பதி மக்கள் நலன்புரி சங்கத்தின் 7 ம் ஆண்டு நிறைவு விழா..!
பொற்பதி மக்கள் நலன்புரி சங்கத்தின் 7 ம் ஆண்டு நிறைவு விழா..!
பொற்பதி மக்கள் நலன்புரி சங்கத்தின் 7 ம் ஆண்டு நிறைவு விழா அதன் தலைவர் சிவலிங்கம் சிறிகலாதான் தலைமையில் நேற்றய தினம் பிற்பகல் 2:00 மணியளவில் அதன் தலைமை காரியாலயமான பொற்பதி குடத்தனையில் இடம்பெற்றது.
இதில் முதல் நிகழ்வாக விருந்தினர்கள் மலர் மாலை அணிவிக்கபட்டு வரவேற்கப்பட்டதை தொடர்ந்து மங்கல சுடர்ககளை
ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் சி. வேந்தன், முன்னாள் பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் ஆ. சுரேஷ்குமார், மக்கள் நலன்புரி சங்க இயக்க்குனர் S.k.சந்துரு, பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர்களான ஆகஸ்ரின், திருமதி சுரேஷ்குமார், பருத்தித்துறை நகர சபை உறுப்பினர் ஜெயகாந்தன் ஜெயகோபி, உட்பட பலரும் ஏற்றினர்.
தொடர்ந்து வரவேற்புரை இடம்பெறதனை தொடர்ந்து கற்கோவளம் முன்பள்ளி மாணவர்களின் வரவேற்பு நடனம் இடம் பெற்றது. அதனை தொடர்ந்து தலைமையுரையினை பொற்பதி மக்கள் நலன்புரி சங்கத்தின் தலைவர் சிவலிங்கம் சிறிகலாதன் நிகழ்தினார்.
அதனை தொடர்ந்து விஜய் டிவி யூனியர் பாடல் போட்டிக்கு தெரிவாகிய கற்கோவளம் சிறுமி அனுஷ்காவின் பாடல்கள் இடம்பெற்றன. அதனை தொடர்ந்து கல்வி சாதனையாளர்களான செல்வன் ம. கர்சன், செல்வன் அ. ஜனார்த்தன், செல்வி ம. சாருஷா, ஆகியோர் க.பொ.த உயர் தரத்தில் சித்தியெய்தியமைக்காக கௌரவிக்கப்பட்டதுடன் தரம் 5 புலமை பரிசில் பரீட்சையில் 142 புள்ளிகளை பெற்ற அ. அதிசயனும் கௌரவிக்கபட்டனர்.
வாழ்த்துரைகளை ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் சி. வேந்தன், முன்னாள் பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் ஆ. சுரேஷ்குமார், S.k.சந்துரு, பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் ஆகஸ்ரின், ஆகியோர் நிகழ்த்தினர்.
இந்நிகழ்வில் பருத்தி துறை பிரதேச சபை, நகரசபை உறுப்பினர்கள், சங்க நிர்வாகிகள், நலன்விரும்பிகள், மக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
