காரைதீவு பொதுமக்களினால் பிரதேசசபைக்கு வழங்கப்பட்ட நிவாரணத்தின் 4ஆம் கட்டம் இன்று....
காரைதீவு பொதுமக்களினால் பிரதேசசபைக்கு வழங்கப்பட்ட நிவாரணத்தின் 4ஆம் கட்டம் இன்று....
கடந்த வருடம் இறுதி காலப்பகுதியில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பல மாவட்டத்தில் உள்ள மக்களிற்க்கு காரைதீவு பொதுமக்களின் ஒத்துழைப்புடன் பிரதேச சபையினரால் நிவாரணப்பணிகள் வழங்கப்பட்டு வந்தமை அறியத்தக்கவிடயமே.
இதன் தொடர்ச்சியாக இன்றைய தினம்(17)4ஆம் கட்டமாக கண்டி மனித அபிவிருத்தி ஸதாபனத்தின் பணிப்பாளரின் வேண்டுகோளிற்கு இணங்க அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மலையக மக்களிற்கு வீட்டின் அத்தியாவசிய பாவனைப்பொருட்களான பானை, சட்டி, கம்பளி நிலவிரிப்புக்கள் என்பன மனித அபிவிருத்தி ஸ்தாபனத்தின் உறுப்பினர்களிடம் காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் சு.பாஸ்கரன், சபை உறுப்பினர் சி.சிவகுமார் இவர்களின் மூலமாக வழங்கப்பட்டன.
அத்தியாவசிய பொருட்களாவன கண்டி மாவட்டத்தில் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனித அபிவிருத்தி ஸ்தாபனத்தினரால் பகிர்ந்தளிக்கப்படும்.
காரைதீவு பிரதேச சபையினால் கட்டம் கட்டமாக வழங்கப்படும் அனைத்து நிவாரணபணிகளும் காரைதீவு பொதுமக்களினால் வழங்கப்பட்ட உதவிகள் என்பவை குறிப்பிடத்தக்கது.
Paskaran Tamilan பாஸ்கரன் ஆதரவாளர்கள்
