Breaking News

ஆளும் தரப்பின் அலட்சிய போக்கால் இரண்டு கிழமைக்கு மேலாக நடு வீதியில் நீர் க்கசிவு ........!



ஆளும் தரப்பின் அலட்சிய போக்கால் இரண்டு கிழமைக்கு மேலாக நடு வீதியில் நீர் க்கசிவு ........!




வீதி அதிகார சபைக்கு சொந்தமான பல்லப்பை பருத்தித்துறை பிரதான வீதியில் இரண்டு கிழமைக்கு மேலாக நீர் கசிந்த வண்ணம் உள்ளன 


இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது 


கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னரே நீர்ப்பாசன.தினைக்களத்தின் நீர் வழங்கும் குழாய் ஒன்றில் வெடிப்பு ஏற்றபட்டதை நவீன இயந்திரங்கள் மூலம் அறிந்த குறித்த திணைக்களம் எந்த இடத்தில் நீர் கசிவு ஏற்படுகிறது என்பதை அறிய முடியாமல் இருந்தது 


ஆனாலும் கடந்த சில நாட்களுக்கு முன் இலங்கை முழுவதும் ஏற்பட்ட அனர்த்த காலத்தின் பின்னர் குறித்த இடத்தில் இருந்து நீர் கசிவதை அவதானித்த மக்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட திணைக்களத்திற்கு அறிவித்த போதும் 


குறித்த இடத்தினை வந்து பார்வையிட்ட நீர்ப்பாசன திணைக்களம் இரண்டு கிழமைகள் கடந்தும் இது வரைக்கும் குறித்த சம்பவம் தொடர்பாக எந்த வித நடவடிக்கையும் எடுக்கபடவில்லை ஆனாலும் குறித்த பகுதியில் தேசிய மக்கள் சக்தியின் பருத்தித்துறை பிரதேச சபையின் வட்டார உறுப்பினர் உள்ளதாகவும் அவரும் இச்சம்பவம் தொடர்பாக மௌனம் சாதிப்பதாகவும் மக்கள் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளதோடு


குறித்த இடத்தில் பாரியளவு விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளதோடு தற்போது நுளம்பு குடம்பிகள் அதிகம் காணப்படுகிறது அதனால் நுளம்புகளால் ஏற்படும் நோய்களுக்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன