வடக்கு கடலை ஆக்கிரமிக்கும் இந்திய இழுவைமடி படகுகள்..!
வடக்கு கடலை ஆக்கிரமிக்கும் இந்திய இழுவைமடி படகுகள்..!
அண்மைய புயல் காற்றிற்கு பின்னர் நேற்றிரவு அதிகளவான இந்திய இழுவைமடி படகுகள் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு முதல் காங்கேசன்துறை வரை கடலிலிருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் வரை வந்து வடக்கு மீனவர்களின் வலைகளை வெட்டிவிட்டு செல்வதாகவும், சட்டவிரோத இழுவை மடி மீன்பிடியில் ஈடுபட்டுவருவதாகவும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
நேற்றிரவு கட்டைக்காடு கடற்பரப்பில் வடக்கு மீனவர்களுக்கும் இந்திய இழுவைமடி படகுகளுக்கும் இடையில் கடலில் முரண்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் கடற்றொழிலிற்கு சென்ற மீனவர்கள் காணொளொ ஒன்றினை எமக்கு அனுப்பிவைத்துள்ளனர்.
அண்மைய நாட்களில் ஏற்பட்ட காலநிலை மாற்றத்திற்கு பின்னர் இரண்டு நாட்களாக இந்திய இழுவைமடி படகுகள் வரவு அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்
.
