எலிக்காய்ச்சல் தொடர்பில் அலுவலர்களுக்கு தெளிவூட்டும் அறிவுப்பகிர்வு கருத்தமர்வு..!
எலிக்காய்ச்சல் தொடர்பில் அலுவலர்களுக்கு தெளிவூட்டும் அறிவுப்பகிர்வு கருத்தமர்வு..!
கிளிநொச்சி மாவட்டச்செயலகத்தின் ஏற்பாட்டில் எலிக்காய்ச்சல் தொடர்பான அறிவுப்பகிர்வு கருத்தமர்வு கிளிநொச்சி மாவட்டச்செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று இடம்பெற்றது.
இக்கருத்தமர்வில் Dr A.N Claritan Consultant Community Physician-Kilinochchi District அவர்களும் Mr.T.Nishanthan Public health inspector
MOH office Kilinochchi அவர்களும்
கலந்துகொண்டு எலிக்காய்சல் என்பது தொடர்பிலும் பரவுகின்ற சந்தர்ப்பங்கள் தொடர்பிலும் அவதானம் செலுத்தவேண்டிய காரணிகள் தொடர்பிலும் முன்னெடுக்கவேண்டிய வழிமுறைகள் தொடர்பிலும் விளக்கவுரையினை வழங்கியிருந்தனர்.
தற்போதைய சூழலில் கிளிநொச்சி மாவட்டத்தில் சிகிச்சையளிக்கப்படும் ஏனைய நோய்நிலைமைகள் தொடர்பிலும் பூரணமான விளக்கவுரையினை வழங்கியதோடு நோய்நிலைமைகள் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களை தவிர்ப்பதற்கான அறிவுரைகளையும் பெற்றுக்கொள்ளக்கூடியதான மருத்துவ வழிமுறைகள் தொடர்பிலும் பூரண விளக்கத்தினை அலுவலர்களுக்கு வழங்கியிருந்தனர்.
