கொழும்பு - புத்தளம் ரயில் பாதையின் சீரமைப்புப் பணிகள் துரிதகதியில்.
கொழும்பு - புத்தளம் ரயில் பாதையின் சீரமைப்புப் பணிகள் துரிதகதியில்..!
சீரற்ற காலநிலையால் சேதமடைந்த கொழும்பு - புத்தளம் ரயில் பாதையின் குடா ஓயா மற்றும் நாத்தாண்டியா இடையிலான ரயில் பாதை துரிதமாக புனரமைக்கப்பட்டு வருகிறது.
வலஹபிட்டிய உப ரயில் நிலையத்திற்கு அண்மையில், சுமார் அரை கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள பழைமையான இரும்பு ரயில் பாலத்துடன் இணைந்த நிலப்பகுதி நீரோட்டத்தினால் சேதமடைந்திருந்த நிலையில், அதுவும் சீர்செய்யப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை ரயில்வே திணைக்களத்தின் நேரடி கண்காணிப்பின் கீழ், சிலாபம் - போலவத்தை ரயில் பராமரிப்புப் பிரிவின் ஊழியர்கள் மற்றும் இலங்கை கடற்படையினர் இணைந்து இந்த புனரமைப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
