Breaking News

2025 மோட்டார் வாகன குற்றங்கள் தொடர்பான அபராதங்கள் – சுருக்கமான வழிகாட்டி

 2025 மோட்டார் வாகன குற்றங்கள் தொடர்பான அபராதங்கள் – சுருக்கமான வழிகாட்டி



பகுதி 1: Spot fine (தபால் நிலையத்தில் செலுத்த)


 வேக வரம்பு மீறுதல்:

   20% வரை: ரூ. 3,000

  20% - 30%: ரூ. 5,000

  30% - 50%: ரூ. 10,000

  50% க்கு மேல்: ரூ. 15,000


*ரூ. 2,000 அபராதம்:

  · இடதுபுறத்தில் இருந்து முந்திச் செல்லுதல், போக்குவரத்து விதிகளை மீறுதல், வாகனம் செலுத்தும் போது மொபைல் பயன்பாடு, போக்குவரத்து சைகை மீறுதல்.


* ரூ. 1,000 அபராதம்:


  · ஓட்டுநர் உரிமம்/வருவாய் உரிமம்/புகைப்படச் சான்று வைத்திருக்காதது.

  · தெளிவற்ற இலக்க தகடுகள்.

  · பாதுகாப்புப் பெல்ட்/ஹெல்மெட் அணியாதது.

  · பக்க கண்ணாடி, Horn, வைப்பர், விளக்குகள், டயர்கள் போன்றவை பழுதடைந்திருப்பது.

  · தவறான நிறுத்தம்/பார்க்கிங், போன்றவை.


*பகுதி 2: நீதிமன்ற வழக்குகள் (நேரடியாக நீதிமன்றத்தில்)


· காப்பீடு insurance இல்லாமல் ஓட்டுதல்: குறைந்தபட்சம் ரூ. 25,000.

· சரியான ஓட்டுநர் உரிமம் இல்லாமல் ஓட்டுதல்: (காலாவதியானது அல்ல, ஒருபோதும் பெறாதது) ரூ. 25,000.

· குடித்துவிட்டு ஓட்டுதல்: ரூ. 25,000 முதல். உரிமம் ரத்து/நிறுத்தம், சிறை தண்டனையும் வாய்ப்பு உண்டு.

· உரிமம் இல்லாதவருக்கு வாகனம் கொடுத்தல்: வாகன உரிமையாளருக்கு ரூ. 30,000 அபராதம்.

· 18 வயதிற்குட்பட்டவர் ஓட்டுதல்: பெற்றோர்/உரிமையாளருக்கு ரூ. 30,000.

· பெருங்கவனமின்மை ஓட்டுப்பழக்கம்: நீதிமன்றம் தீர்மானிக்கும் (ரூ. 10,000 முதல் 50,000 வரை).

· ரயில் கிராசிங்கில் கவனக்குறைவு: ரூ. 25,000.


📌 முக்கிய குறிப்பு:


· ஸ்பாட் ஃபைன்ஸை 14 நாட்களுக்குள் (GovPay மூலம் ஆன்லைனில் அல்லது தபால் நிலையத்தில்) செலுத்தவும்.

· 14-28 நாட்களுக்குள் செலுத்தினால், அபராதம் இரட்டிப்பாகும்.

· 28 நாட்களுக்குப் பிறகு, அபராதம் ஏற்கப்படாது → 


மற்றவருக்கும் பகிருங்கள்


A.L. Mohamed Fahim