வது கண்ணுக்கு சிகிச்சை" எனும் விசேட கண் மருத்துவ முகாம்...!!
"3 வது கண்ணுக்கு சிகிச்சை" எனும் விசேட கண் மருத்துவ முகாம்...!!
.
"மூன்றாவது கண்ணுக்கு சிகிச்சை" எனும் தொனிப்பொருளில் விசேட கண் மருத்துவ முகாம் இன்று 2025.11.01ம் திகதி கொழும்பு, தேசிய கண் வைத்தியசாலையில் இடம்பெற்றது.
கண் தொடர்பான தகவல்களை சமூகமயமாக்கும் மகத்தான் பணியினை மேற்கொள்கின்ற ஊடகவியலாளர்களுக்காக நடாத்தப்பட்ட இந்த இலவச கண் சிகிச்சை முகாமில் பெருந்தொகையான ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு, கொழும்பு, தேசிய கண் வைத்தியசாலையுடன் இணைந்து ஏற்பாடு செய்த இந்த நிகழ்வில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜயசிங்க, தேசிய கண் வைத்தியசாலை பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் ஜயருவன் பண்டார, வைத்தியர் அஹமட் ஜஸா ஆகியோர் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தனர்
