பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ எம்முடன் இணைந்து கொள்ளுங்கள் வடமராட்சி கிழக்கு இளைஞர்கள் வேண்டுகோள்...!
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ எம்முடன் இணைந்து கொள்ளுங்கள் வடமராட்சி கிழக்கு இளைஞர்கள் வேண்டுகோள்...!
இயற்கை சீற்றம் பாரிய அளவில் வலு அடைந்துள்ளதால் அனைத்து பிரதேசங்களிலும் மக்கள் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்..
வடமராட்சி கிழக்கு மக்களே வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் அதிகம் பாதிக்கப்பட்டு வரும் நபர்கள் குடும்பங்கள் உமது தேவைக்கேற்ப சமைத்த உணவு, உலர் உணவு பொதிகள் மற்றும் அத்தியாவசியமான மருத்துவ பொருட்கள் என்பவற்றை எங்களால் இயன்ற அளவு வழங்க முடியும்
தயவு செய்து எம்மிடம் ஆள் பலம் மற்றும் பணவசதி குறைவாக உள்ளது இந்த சந்தர்ப்பத்தை அலட்சியம் செய்ய வேண்டாம் உங்களுக்கு அவசர உதவி தேவைப்படுபவர்கள் தொடர்பு கொள்ளுங்கள் மற்றும் எமது போக்குவரத்து பயணங்களும் நெருக்கடியாக உள்ளது உதவ முடிந்த நபர்கள் தொடர்பு கொண்டு எம்முடன் இவ் அணர்த்த காலத்தில் உதவ முன் வாருங்கள்
இனிவரும் சில நாட்கள் இன்னும் பாதிப்பு அதிகமாக இருக்கும் என்பதால் தொடர்ந்து மக்களுடன் பணியாற்ற காத்திருக்கின்றோம், எங்களுடன் இணைந்து பணியாற்ற விரும்பும் வடமராட்சி கிழக்கு இளைஞர்கள், பொது அமைப்புக்கள், சமூக நலன்சார் தன்னார்வலர்கள் தொடர்பு கொள்ளுங்கள்..
பாதிக்கப்படும் மக்கள் தொடர்பு கொள்ளுமிடத்து எங்களால் முடிந்தவரையிலும் உடனடி உதவிகளை வழங்க தயாராக உள்ளோம்.
அனைத்து பிரதேசங்களிலும் பொது அமைப்புக்கள், இளைஞர் குழுக்கள், தன்னார்வலர்கள் மக்களுடன் இணைந்து இருங்கள்
லின்ரன் ‐ 0769834917
கணைச்செல்வன் ‐ 076672172
காண்டீபன் - 705870414
நிதர்சன்- 0775450737
கஜீபன்- 767592027
